பதிவு செய்த நாள்
09 ஆக2016
05:09

சென்னை : ரெனோ நிறுவனம், இந்தியாவில் இருந்து ஆப்ரிக்க நாடுகளுக்கு, கார் ஏற்றுமதி செய்ய உள்ளது.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரெனோ நிறுவனம், உள்நாட்டில், நடப்பாண்டு ஜன., முதல், ஜூலை வரையிலான காலத்தில், 73 ஆயிரத்து, 863 கார்களை விற்பனை செய்து உள்ளது.கடந்த ஏப்., முதல் ஜூன் வரை, இந்த நிறுவனம், 441 கார்களை ஏற்றுமதி செய்து உள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில், 56 கார்களாக இருந்தன. இதையடுத்து, அதிகளவில் கார்களை ஏற்றுமதி செய்ய முடிவு செய்து உள்ளது.
இதுகுறித்து, அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:எங்கள் நிறுவனம், கடந்த மாதம், ‘க்விட், டஸ்டர்’ மாடல் கார்களை, இலங்கைக்கு ஏற்றுமதி செய்தது. இந்த மாதம், நேபாளம், பூடான் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய உள்ளது. மேலும் தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட ஆப்ரிக்க நாடுகளுக்கும், விரைவில், ஏற்றுமதி செய்ய உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|