பதிவு செய்த நாள்
09 ஆக2016
05:10

புதுடில்லி : ஜியோனி நிறுவனம், மொபைல் போன் சந்தை பங்களிப்பை அதிகரிக்க முடிவு செய்து உள்ளது.
‘ஸ்மார்ட் போன்’ விற்பனையில் ஈடுபட்டு வரும் ஜியோனி நிறுவனத்திற்கு, இந்தியாவில், 47 ‘பிராண்டு ஸ்டோர்’களும்; 450 சேவை மையங்களும் உள்ளன. தற்போது, இந்திய மொபைல் போன் சந்தையில், ஜியோனியின் பங்கு, 5 சதவீதம் என்றளவில் உள்ளது. இதை, நடப்பு நிதியாண்டில், 7 – 8 சதவீதமாக அதிகரிக்க, திட்டமிட்டு உள்ளது.
இதுகுறித்து, ஜியோனி நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:கடந்த மூன்று ஆண்டுகளில், எங்கள் நிறுவனம், 6,500 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி உள்ளது. புதிய மொபைல் போன்களை விளம்பரம் செய்யும் பணிக்காக, 500 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது. நடப்பாண்டில், பிராண்டு ஸ்டோர்களின் எண்ணிக்கை, 250 ஆக உயர்த்தப்படும். இதன் மூலம், மொபைல் போன் சந்தையில், எங்கள் நிறுவனத்தின் பங்கு, 7 – 8 சதவீதமாக அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|