பதிவு செய்த நாள்
09 ஆக2016
05:11

மும்பை : எச்.டி.எப்.சி., எர்கோ நிறுவனம், உலகளவில் செயல்படும் நிறுவனங்களின் சொத்து பாதுகாப்பிற்காக, அரசியல் இடர்பாட்டு காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ், ஒருவர், முதலீடு செய்துள்ள வெளிநாடுகளில், திடீரென்று ஏற்படும் அரசியல் கிளர்ச்சி, வன்முறை போன்றவற்றால் ஏற்படும் இழப்பிற்கு, நிவாரணம் பெறலாம். தனி நபர், முதலீட்டாளர், ஒப்பந்ததாரர், ஏற்றுமதியாளர், கடன் வழங்குவோர் உட்பட, பலதரப்பட்டோர், இந்த காப்பீட்டின் மூலம், வெளிநாடுகளில் உள்ள தங்கள் சொத்துகளுக்கு, அரசியல் இடர்பாட்டு காப்பீடு செய்து கொள்ளலாம். தொழில் நிறுவனத்தை, அரசு கையகப்படுத்துதல், நீதிமன்ற நடவடிக்கைகளால் நிறுவனங்களுக்கு ஏற்படும் பாதிப்பு, அரசியல் கிளர்ச்சி, அன்னியச் செலாவணியை மாற்ற இயலாத சூழல் போன்றவற்றின் பாதிப்பில் இருந்து இக்காப்பீடு பாதுகாக்கும். நிறுவனங்கள், வெளிநாட்டு விரிவாக்க திட்டங்களை நம்பிக்கையுடன் மேற்கொள்ள இது துணை புரியும்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|