பதிவு செய்த நாள்
09 ஆக2016
05:12

ஐதராபாத் : செகந்தராபாத் ரயில் நிலையத்தில், நாகலபள்ளி – துக்ளகாபாத் இடையே, வாராந்திர சரக்கு ரயில் போக்குவரத்தை, ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, நேற்று துவக்கி வைத்தார்.
பின் அவர் பேசியதாவது: நடப்பு, 2016 – 17ம் நிதியாண்டு ரயில்வே பட்ஜெட்டில், சரக்கு கட்டணம் குறைப்பு உட்பட, பல்வேறு சீர்திருத்த திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இத்துடன், மேலும் முக்கிய திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரயில்வேயில், சரக்கு போக்குவரத்து கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. முதன் முதலாக, சரக்கு ரயில் போக்குவரத்துக்கு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு, ‘கார்கோ எக்ஸ்பிரஸ்’ சரக்கு ரயில்கள், குறித்த நேரத்திற்கு முன்பாகவே, சரக்குகளை கொண்டு போய் சேர்த்துள்ளன என்பது பாராட்டத்தக்கது. ரயில்வே வருவாயில், மூன்றில் இரு பங்கு, சரக்கு ரயில் போக்குவரத்தில் கிடைக்கிறது; இது, மேலும் அதிகரிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|