பதிவு செய்த நாள்
09 ஆக2016
05:13

ஐதராபாத் : ஐதராபாத்தில், இசட்.எப்.பிரெடெரிக் ஷாபென் நிறுவனம், தொழில்நுட்ப மையத்தை அமைக்க முடிவு செய்துள்ளது.
ஜெர்மனி நாட்டை சேர்ந்த, இசட்.எப்.பிரெடெரிக் ஷாபென் ஏ.ஜி., நிறுவனம், கார் உதிரி பாகங்கள் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம், இந்தியாவில், ஐதராபாத்தில், தொழில்நுட்ப மையத்தை அமைக்க முடிவு செய்து உள்ளது. இந்த மையத்தில், இயந்திர சாதனங்களுக்கான மென்பொருள் தயாரிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து, அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:எங்கள் நிறுவனம், ஐதராபாத்தில், தொழில்நுட்ப மையம் ஒன்றை அமைக்க உள்ளது. இந்த மையம், 2017ம் ஆண்டு, ஜன., மாதம், முழு செயல்பாட்டிற்கு வரும். இங்கு, 2020ம் ஆண்டில், 2,500 பொறியாளர்கள் வேலை செய்வர். இந்த மையத்தின் மூலம், சர்வதேச தரத்தில், இந்திய சந்தைக்கு ஏற்ப உதிரிபாகங்கள் வடிவமைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|