பதிவு செய்த நாள்
10 ஆக2016
06:32
புதுடில்லி : இன்டெக்ஸ் நிறுவனம், ரெப்ரிஜிரேட்டர், வாஷிங் மிஷின் தயாரிப்பில் ஈடுபட முடிவு செய்து உள்ளது.
மொபைல் போன் தயாரித்து வரும் இன்டெக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம், தற்போது, நுகர்வோர் சாதனங்கள் விற்பனையிலும் ஈடுபட முடிவு செய்து உள்ளது. அதன்படி, ரெப்ரிஜிரேட்டர், வாஷிங் மிஷின் ஆகியவற்றை விற்பனை செய்ய உள்ளது. இதன் ரெப்ரிஜிரேட்டர் விலை, 14,300 ரூபாய்; ஆட்டோமேடிக் வாஷிங் மிஷின் விலை, 14,990 ரூபாய் என்றளவில் இருக்கும் என, தெரிகிறது.
இதுகுறித்து, அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: எங்கள் நிறுவனத்தின் மொத்த வருவாயில், மொபைல் போன் மூலம் 85 சதவீதமும்; நுகர்வோர் சாதனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் மூலம், 15 சதவீதமும் வருகிறது. அடுத்த ஆண்டில், நுகர்வோர் சாதனங்கள் மூலம் கிடைக்கும் வருவாயை, 25 சதவீதமாக அதிகரிக்க உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|