பதிவு செய்த நாள்
14 ஆக2016
06:04

புதுடில்லி:மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, லோக்சபாவில் பேசியதாவது:சில தினங்களுக்கு முன், பொதுத்துறை வங்கி ஒன்றின் கணினி ஒருங்கிணைப்பை முடக்க முயற்சிக்கப்பட்டது. அதை, வங்கி அதிகாரிகள், உரிய நேரத்தில் கண்டுபிடித்து தடுத்து விட்டனர். இதனால், நாசவேலை முயற்சி முறியடிக்கப்பட்டது.
நாசகாரர்கள் நிதி செயல்பாடுகளை முடக்கினால், ஒட்டுமொத்த வங்கிகளின் கணினி ஒருங்கிணைப்பு பாதிக்கப்படும். அதனால், வங்கிகளின் கணினி ஒருங்கிணைப்பில் நாசவேலையை தடுப்பதற்கான, தொழில்நுட்ப வசதிகள் புகுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார். சமீபத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த பைசல் என்ற கணினி நாசகாரன், கனரா வங்கியின் கணினி ஒருங்கிணைப்பில் புகுந்து, போலியாக வங்கியின் வலைதள பக்கத்தை உருவாக்கினான். ரிசர்வ் வங்கி, உடனடியாக இதை கவனித்து எச்சரித்தது. உடனே, தன் கணினி ஒருங்கிணைப்பு, ‘சர்வர்’ இயக்கத்தை நிறுத்திய கனரா வங்கி, மாற்று சர்வர் மூலம், வங்கி செயல்பாடுகளை தொடர்ந்தது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|