பதிவு செய்த நாள்
14 ஆக2016
06:06
புனே:பியாகோ குழுமத்தின், 100 சதவீத துணை நிறுவனமான பியாகோ வெகிக்கிள்ஸ் பிரைவேட் லிமிடெட், அதன் இருசக்கர வாகன வர்த்தகம், இந்த ஆண்டு லாபகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறது.இதுகுறித்து, இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்டிபனோ பெலி கூறியதாவது:புனேவில் உள்ள எங்கள் ஆலை, ஆண்டு ஒன்றுக்கு, 1 லட்சத்து, 50 ஆயிரம் வாகனங்களை தயாரிக்கும் திறன் கொண்டதாகும். எங்களின் மூன்று சக்கர வாகன வர்த்தகம், ஏற்கனவே லாபகரமாக இருக்கிறது. இருசக்கர வாகன சந்தையில், எங்கள் பிராண்டான, வெஸ்பா, 2002ம் ஆண்டு முதல் இருக்கிறது. வெஸ்பா பிரீமியம் ஸ்கூட்டர் பிரிவில் இருக்கிறது.அண்மையில், ‘ஏப்ரிலியா’ எனும் புதிய பிராண்டில் ஸ்கூட்டரை அறிமுகம் செய்திருக்கிறோம். வெஸ்பா பிரீமியம் ஸ்கூட்டர் என்பதால், அது வெகுஜன சந்தையில் அதிகம் விற்காது. ஆனால், ஏப்ரிலியா அதிகமாக விற்கும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|