பதிவு செய்த நாள்
14 ஆக2016
06:06

புதுடில்லி:சர்க்கரை ஆலைகளின் எத்தனால் உற்பத்திக்கு அளிக்கப்பட்ட வரி விலக்கை, மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது. சர்க்கரை விலை கிலோ, 30 ரூபாயாக வீழ்ச்சி கண்ட போது, ஆலைகள் நலன் கருதி, எத்தனாலுக்கு, 12.5 சதவீத கலால் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. தற்போது, சர்க்கரை விலை, 45 ரூபாயாக உயர்ந்துள்ளதால், மீண்டும் கலால் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால், சர்க்கரை ஆலைகள், ஒரு லிட்டர் எத்தனாலுக்கு, கூடுதலாக, ஐந்து ரூபாய் செலுத்த நேரிட்டுள்ளது.
இதுகுறித்து, சர்க்கரை ஆலை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பெட்ரோலிய நிறுவனங்களுக்கு, ஒரு லிட்டர் எத்தனால், 48.50 – 49.50 ரூபாய்க்கு விற்க, ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது. அது முழுமையாக சப்ளை செய்யாத நிலையில், மீண்டும் கலால் வரி அமலானதால், ஆலைகள் இழப்பை சந்திக்க நேரிட்டுள்ளது. இதை, மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|