பதிவு செய்த நாள்
14 ஆக2016
06:11

புதுடில்லி:கடந்த ஜூலையில், ஏற்றுமதியும், இறக்குமதியும் குறைந்ததை அடுத்து, நாட்டின் வர்த்தக பற்றாக்குறை, 59.7 சதவீதம் குறைந்து, 776 கோடி டாலராக (52,163 கோடி ரூபாய்) சரிவடைந்துள்ளது.இது, கடந்த ஆண்டு, ஜூலையில், 1,309 கோடி டாலராக (83,304 கோடி ரூபாய்) இருந்தது. கடந்த ஜூலையில், ஏற்றுமதி, 6.84 சதவீதம் குறைந்து, 2,160 கோடி டாலராக (1.45 லட்சம் கோடி ரூபாய்) சரிவடைந்தது. இது, கடந்த ஆண்டு, ஜூலையில், 2,320 கோடி டாலராக (1.48 லட்சம் கோடி ரூபாய்) இருந்தது.
இதே காலத்தில், நாட்டின் இறக்குமதி, 19.03 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 3,630 கோடி டாலரில் இருந்து, 2,940 கோடி டாலராக குறைந்துள்ளது. நாட்டின் ஏற்றுமதி, 18 மாதங்களுக்குப் பின், இந்தாண்டு ஜூன் மாதம், அதிகரித்து காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.கடந்த ஜூலையில், பெட்ரோலியம் சாரா பொருட்களின் ஏற்றுமதி, 4.46 சதவீதம் சரிவடைந்து, 1,901 கோடி டாலராக இருந்தது. இது, கடந்த ஆண்டு ஜூலையில், 2,008 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
மதிப்பீட்டு மாதத்தில், அமெரிக்கா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளுக்கான ஏற்றுமதி, குறைந்திருந்தது. அதேசமயம், ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி, அதிகரித்திருந்தது. கடந்த ஜூலையில், எண்ணெய் இறக்குமதி, 28.10 சதவீதம் குறைந்து, 680 கோடி டாலராக சரிவடைந்துள்ளது. இது, கடந்த ஆண்டு, இதே காலத்தில், 948 கோடி டாலராக இருந்தது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|