நாட்டின் வர்த்­தக பற்­றாக்­குறை குறைந்­ததுநாட்டின் வர்த்­தக பற்­றாக்­குறை குறைந்­தது ... தனிநபர் ஜி.டி.பி.,யில் இந்தியாவின் நிலை தனிநபர் ஜி.டி.பி.,யில் இந்தியாவின் நிலை ...
நிதி திட்­ட­மிடல் வழி­காட்டி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஆக
2016
04:17

பணம் தொடர்­பாக கற்­றுக்­கொண்ட எல்லா நுணுக்­கங்­களும் தான் செய்த நிதி தவ­று­களில் இருந்து பெற்ற பாடங்கள் தான் என்­கிறார் தனி நபர் நிதி வல்­லு­ன­ரான ஜேன் பிரைண்ட் குவின்.

இந்த பாடங்­களைக் கொண்டு மற்­ற­வர்­களுக்கு வழி காட்டும் வகையில் அவர் எழு­தி­உள்ள, ‘மேகிங் தி மோஸ்ட் ஆப் யுவர் மணி’ புத்­த­கத்தில், நிதி திட்­ட­மிடல் தொடர்­பாக அவர் முன்­வைக்கும் கருத்­துக்கள்:உங்கள் நிதி திட்டம் விருப்ப பட்­டி­யலில் இருந்து துவங்க வேண்டும். விருப்­பங்கள் எல்லா­வற்­றையும் எழு­துங்கள். மனதில் உள்ள ஒவ்­வொரு விருப்­பத்­தையும் பட்­டி­ய­லி­டுங்கள். அவற்­றுக்­கான பணம் இருக்­கி­றதா என்­பதை இப்­போ­தைக்கு மறந்து விடுங்கள். இவை எல்லாம் நம்மால் முடி­யாது என நீங்கள் நினைக்­கலாம். நிதி திட்­ட­மி­டலின் நோக்கம் என்­ன­வெனில், முக்­கி­ய­மா­ன­வற்றை தீர்­மா­னித்து, அதை அடை­வ­தற்­கான வழியை உரு­வாக்­கு­வ­தாகும்.
ஒரு நோட்டு புத்­த­கத்தில் அல்­லது கம்ப்­யூட்­டரில் வாழ்க்கை இலக்­குகள் என தலைப்­பிட்டு அதன் கீழ், எனக்கு வேண்­டி­யவை என வரி­சை­யாக குறித்து வையுங்கள். அதன் பக்கத்தில் அதை எப்­போது அடைய விருப்பம் என குறிப்­பி­டுங்கள். அடுத்­த­தாக அதற்­கான வழி என்ன என்­பதை குறிப்­பி­டுங்கள்.எல்­லா­வற்­றையும் குறித்து வைத்த பின், நிதா­ன­மாக யோசித்துப் பாருங்கள். இவை எல்லாம் சாத்­தியம் ஆக வேண்டும் என்றால் என்ன தேவை? இதற்­காக எவ்­வ­ளவு உழைக்க வேண்டும்? இவை உகந்­தவை தானா? போன்ற கேள்­விகள் எழும்.
இப்­போது இன்­னொரு பட்­டி­யலை உரு­வாக்­கவும். அதில் தனிப்­பட்ட இலக்­கு­களை குறுப்­பி­டவும். 30 வயதில் நீங்கள் புத்­தகம் எழுத விரும்­பலாம். பிள்­ளை­க­ளுடன் அதிக நேரம் செல­விட விரும்­பலாம். பெரிய நிறு­வ­னத்தில் உயர் அதி­கா­ரி­யாக நீடிக்­கலாம். இந்த பட்­டியல், ஒவ்­வொரு இலக்கும் உங்கள் நிதி நிலையில் ஏற்­ப­டக்­கூ­டிய பாதிப்­பு­களை உணர்த்தும். இது உங்கள் விருப்­பங்­களில் எவை முக்­கி­ய­மா­னவை என தேர்வு செய்ய உதவும்.
இனி, உங்கள் கனவு இலக்­கு­க­ளுடன், போது­மான காப்­பீடு, கடன்­களை அடைப்­பது, சொந்த வீடு, பிள்­ளைகள் கல்வி, ஓய்வு கால நிதி ஆகி­ய­வற்­றையும் சேர்த்­துக்­கொள்­ளுங்கள். உங்­க­ளுக்­கான நிதி திட்­ட­மிடல் தயா­ராகி விட்­டது. இதற்­கான நிதி வழியை இனி ஆராய வேண்டும். லாட்­ட­ரியில் பணம் விழுந்தால் நன்­றாக தான் இருக்கும். ஆனால், அது சாத்­தி­ய­மில்லை. உங்கள் வரு­மா­னத்­திற்குள் வகுக்­கப்­படும் திட்­டமே வெற்றி பெறும். அதில் தான் நீங்கள் சேமித்து முத­லீடு செய்ய வேண்டும்.
இதை உங்கள் நிகர மதிப்பை அறி­வதில் இருந்து துவங்­கலாம். நிகர மதிப்பை அறி­வது, உங்கள் கடன் கட்­டுப்­பாட்டில் இருக்­கி­றதா? முத­லீடு சிறப்­பாக உள்­ளதா? அவ­சர கால நிதி போது­மா­ன­தாக இருக்­கி­றதா? போன்ற கேள்­வி­க­ளுக்கு விடை­யாக அமையும். நிகர மதிப்பை கணக்­கிட, உங்கள் வசம் உள்ள பொருட்­களை எல்லாம் விற்றால் என்ன கிடைக்கும் என கணக்­கிட்டு, கடன் பொறுப்­பு­களை கழிக்­கவும். நிகர மதிப்பை தொடர்ந்து அதி­க­மாக்­கு­வது தான் உங்கள் நோக்­க­மாக இருக்க வேண்டும். பணக்­கா­ர­ராகி கொண்­டி­ருக்க வேண்டும் என்­றில்லை. பாது­காப்­பான நிலையே முக்­கியம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)