தனிநபர் ஜி.டி.பி.,யில் இந்தியாவின் நிலைதனிநபர் ஜி.டி.பி.,யில் இந்தியாவின் நிலை ... அரசு பத்­தி­ரங்­களில் முத­லீடு செய்ய வாய்ப்பு அரசு பத்­தி­ரங்­களில் முத­லீடு செய்ய வாய்ப்பு ...
தாமதமாக வரி தாக்கல் செய்ய முடியுமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஆக
2016
04:19

வரு­மான வரி கணக்கு தாக்கல் செய்வ­தற்­காக நீட்­டிக்­கப்­பட்ட அவ­கா­சமும் முடிந்து விட்­டது. வரு­மான வரி சட்­டத்தின் படி, வரு­மான வரி கணக்கை தாக்கல் செய்­வதும் அவ­சியம். எனவே, வரு­மான வரி விலக்­கிற்கு மேல் வரு­மானம் உள்ள அனை­வ­ருமே வரு­மான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
எனினும், வரு­மான வரி கணக்கை தாக்கல் செய்­யாமல் தவ­ற­விட்­ட­வர்கள் பலர் இருக்­கலாம். இதற்­கான காரணம் என்­ன­வாக இருந்­தாலும், கெடு­வுக்குள் கணக்கு தாக்கல் செய்­யத்­த­வ­றி­ய­வர்கள் கவ­லைப்­பட வேண்­டி­ய­தில்லை, தாம­த­மா­கவும் தாக்கல் செய்­யலாம். 2015 – 16ம் நிதி ஆண்­டுக்­கான வரு­மான வரி கணக்கை, 2018 மார்ச் மாதம் வரை தாக்கல் செய்­யலாம். இது, ‘பிலேடெட் ரிடர்ன்’ என்று குறிப்­பி­டப்­ப­டு­கி­றது. பொது­வாக வரு­மான வரி கணக்கை உரிய நேரத்தில் தாக்கல் செய்­து­வி­டு­வது தான் நல்­லது. கெடு காலம் முடிந்த பிறகு தாக்கல் செய்யும் வாய்ப்பு இருந்­தாலும், குறித்த காலத்தில் தாக்கல் செய்­வதால் கிடைக்க கூடிய சில நன்­மை­களை இழக்க வேண்­டி­­இருக்கும்.
முதல் அணு­கூலம், வரித்­தாக்­கலில் ஏதேனும் தவ­றுகள் செய்­தி­ருந்தால், அதை மீண்டும் ஒரு­முறை திருத்தம் செய்து தாக்கல் செய்ய முடியும். எனினும், குறித்த காலத்­திற்குள் கணக்கை தாக்கல் செய்து இ­ருந்தால் மட்­டுமே இது சாத்­தியம். தாம­த­மாக தாக்கல் செய்வோர் இவ்­வாறு செய்ய முடி­யாது. அதே போல, வரி பிடித்தம் செய்­யப்­பட்ட தொகை திரும்பி செலுத்­தப்­ப­டு­வ­தாக இருந்தால், அதற்­கு­ரிய வட்­டியும் சேர்த்து அளிக்­கப்­படும். கணக்­கி­டப்­படும் ஆண்டின் ஏப்ரல் மாதம் முதல் ஒவ்­வொரு மாதத்­திற்கும் ஒரு சத­வீத வட்டி அளிக்­கப்­ப­டு­கிறது. ஆனால், தாம­த­மாக தாக்கல் செய்யும் போது இவ்­வாறு வட்டி பெற முடி­யாது.
அது மட்டும் அல்­லாமல், வரி பிடித்தம் திரும்பி அளிக்­கப்­பட வேண்­டிய நிலை இருந்தால், அது தாம­த­மா­வ­தற்­கான வாய்ப்பும் இருக்­கி­றது.மேலும், இவ்­வாண்டில் ஏற்­பட்ட இழப்பை, அடுத்த ஆண்­டிற்கு கொண்டு செல்­வதும் சாத்­தியம் இல்­லாமல் போகும். இருப்­பினும், வரு­மான வரி கணக்கு தாக்கல் செய்­வதே நல்­லது என்­பதால், தாம­த­மா­க­வேனும் இதை நிறை­வேற்­று­வது சிறந்­தது. ஆனால், தவ­று­களை திருத்தும் வாய்ப்பு இல்­லா­ததால், விண்­ணப்­பத்தில் தக­வல்­களை இடம்­பெறச் செய்­யும்­போது, தவறு ஏற்­ப­டாமல் இருப்­பதில் மிகவும் கவ­ன­மாக இருக்க வேண்டும்.
வரு­மான வரி கணக்கு தாக்கல் செய்த பிறகு, ‘வெரி­பி­கேஷன்’ செயல்­மு­றை­யையும் சரி பார்த்­துக்­கொள்ள வேண்டும். விண்­ணப்பம் தாக்கல் செய்­த­தற்­கான ஏற்பு, வரு­மான வரித்­து­றைக்கு சென்று விட்­டதா என, உறுதி செய்து கொள்ள வேண்டும். தாம­த­மாக தாக்கல் செய்­ப­வர்கள், ஒரு­வேளை வரு­மான வரி செலுத்த வேண்­டிய நிலை இருந்தால், முதலில் வரித்­தொகையை உரிய காலத்தில் செலுத்தி விட்டு, அதன் பின் முடி­யும்­போது கணக்கை தாக்கல் செய்­யலாம். இதன் மூலம் அப­ரா­தத்தை தவிர்க்க முடியும். அடுத்த கணக்­கீடு ஆண்டு முதல் தாம­த­மாக வரித்­தாக்கல் செய்­வ­தற்­கான அவ­காசம் 2 ஆண்டில் இருந்து ஓராண்­டாக குறைக்­கப்­பட உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)