தாமதமாக வரி தாக்கல் செய்ய முடியுமா?தாமதமாக வரி தாக்கல் செய்ய முடியுமா? ... 24 மணி நேரம் இயங்கும் கடை­க­ளுக்கு ஆதரவில்லை 24 மணி நேரம் இயங்கும் கடை­க­ளுக்கு ஆதரவில்லை ...
அரசு பத்­தி­ரங்­களில் முத­லீடு செய்ய வாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஆக
2016
04:19

சிறு முத­லீட்­டா­ளர்கள், அரசு வெளி­யிடும் பத்­தி­ரங்­களில் நேர­டி­யாக பங்­கேற்­பதை எளி­தாக்க, ரிசர்வ் வங்கி மேற்­கொண்­டுள்ள நட­வ­டிக்கை இப்­பி­ரிவில் ஆர்­வத்தை ஏற்­ப­டுத்­துமா?

முத­லீட்டு பரப்பில் அரசு பத்­தி­ரங்கள் முக்­கிய அங்கம் வகிக்­கின்­றன. முத­லீட்டு சாத­னங்கள் பற்றி விவா­திக்­கப்­படும் போதெல்லாம் அரசு பத்­தி­ரங்கள் தவ­றாமல் குறிப்­பி­டப்­ப­டு­கின்­றன. பாது­காப்­பா­னவை, நீண்ட கால நோக்கில் நிலை­யான வரு­மானம் தரு­பவை உள்­ளிட்ட அரசு பத்­தி­ரங்­களின் சாத­க­மான அம்­சங்­க­ளாக அமை­கின்­றன. எனினும், இது­வரை பெரும்­பாலும் வங்­கிகள், மியூச்­சுவல் பண்ட் நிறு­வ­னங்கள், நிதி கழ­கங்கள், காப்­பீடு நிறு­வ­னங்கள் ஆகி­ய­வையே அரசு பத்­திர முத­லீட்டில் ஆதிக்கம் செலுத்தி வரு­கின்­றன. சிறு முத­லீட்­டா­ளர்­களை பொறுத்­த­வரை நேரடி பங்­கேற்பு அதிகம் இல்­லாமல், மற்ற திட்­டங்கள், மியூச்­சுவல் பண்ட்கள் போன்­றவை மூலமே இவற்றில் மறை­மு­க­மாக முத­லீடு செய்யும் நிலை உள்­ளது. இவற்றின் சிக்­க­லான நடை­முறை உள்­ளிட்ட பல அம்­சங்கள் இதற்கு கார­ண­மாக அமை­கின்­றன.
புதிய வாய்ப்புஎனினும், அரசு பத்­தி­ரங்­களில் சில்­லரை அல்­லது சிறு முத­லீட்­டா­ளர்கள் பங்­கேற்பை ஊக்­கு­விக்கும் வகையில், ரிசர்வ் வங்கி முயற்சி செய்து வரு­கி­றது. ஏற்­க­னவே சிறு முத­லீட்­டா­ளர்கள், அரசு பத்­தி­ரங்­களில் முத­லீடு செய்­வதை சாத்­தி­ய­மாக்­கி­யுள்ள நிலையில், இவற்றில் நேர­டி­யாக பரி­வர்த்­தனை செய்­வதை மேலும் எளி­தாக்கும் நட­வ­டிக்­கையை ரிசர்வ் வங்கி அறி­வித்­துள்­ளது. இதன்படி என்.எஸ்.டி.எல்., மற்றும் சி.டி.எஸ்.எல்., ஆகிய அமைப்­பு­க­ளிடம், ‘டிமெட்’ கணக்கு வைத்­தி­ருக்கும் முத­லீட்­டா­ளர்கள் அனை­வரும் ரிசர்வ் வங்­கியால் நிர்­வ­கிக்­கப்­படும் என்.டி.எஸ்., – ஓ.எம்., மேடை வாயி­லாக அரசு பங்­கு­களை நேர­டி­யாக வாங்கி, விற்க வழி செய்­யப்­பட்­டுள்­ளது. கணக்கு வைத்­துள்ள வங்­கிகள் மூலம் இதை மேற்­கொள்­ளலாம். வரும், ஆகஸ்ட் 16ம் தேதி முதல் இதற்­கான நடை­முறை அம­லுக்கு வரு­கி­றது.
அரசு பத்­தி­ரங்கள் அர­சுக்கு தேவை­யான நிதி திரட்ட, அரசு சார்பில், ரிசர்வ் வங்கி மூல­மாக பத்­தி­ரங்கள் வெளி­யி­டப்­ப­டு­கின்­றன. குறு­கிய கால அள­வி­லானவை, ‘டிர­ஷரி பில்’ஸ் எனப்­ப­டு­கின்­றன. இவைத்­த­விர, 30 ஆண்டு கால அள­வி­லான பத்­தி­ரங்கள், ‘கவர்மென்ட் செல்­யூ­ரி­டிடீஸ்’ எனப்­ப­டு­கின்­றன. இவற்றில் நிதி கழ­கங்கள், வங்­கிகள் உள்­ளிட்­டவை முத­லீடு செய்­கின்­றன. இந்த பத்­தி­ரங்­களை பரி­வர்த்­தனை செய்­யவும் முடியும். ஆனால், இது­வரை சிறு முத­லீட்­டாளர் இவற்றில் பி.பி.எப்., உள்­ளிட்ட திட்­டங்கள் மூலமே மறை­மு­க­மாக பங்­கேற்கும் நிலை உள்­ளது.
இந்­நி­லையில், சிறு முத­லீட்­டா­ளர்கள் நேரடி பங்­கேற்பை ஊக்­கு­விக்கும், ரிசர்வ் வங்­கியின் நட­வ­டிக்கை, பொது­வாக வர­வேற்க தக்­கது என்­பதே பர­வ­லான கருத்­தாக அமை­கி­றது. ஏனெனில், இது சிறு முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு, நீண்ட கால முத­லீட்டு வாய்ப்பை ஏற்­ப­டுத்தி தரு­கி­றது. தற்­போ­து வங்கி டிபா­சிட்கள் போன்­றவை தவிர சிறு முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு, நீண்ட கால முத­லீட்டு வாய்ப்­புகள் இல்லை. ஆனால், டிபா­சிட்­க­ளுக்கு கால வரம்பு உண்டு. அரசு பத்­தி­ரங்­களில், 10 முதல் 30 ஆண்­டுகள் வரை முத­லீடு செய்யலாம். எனவே, ஓய்­வூ­தி­ய­தா­ரர்­க­ளுக்கு இது மிகவும் ஏற்­ற­தாக இருக்கும் என கரு­தப்­ப­டு­கி­றது. அரசு பத்­தி­ரங்கள் அளிக்கும் வருவாய், நீண்ட கால நோக்கில் டிபாசிட் மூல­மான வரு­வாயை விட அதி­க­மாக இருக்கும் என்றும் கரு­தப்­ப­டு­கி­றது.
சவால்கள்ரிசர்வ் வங்­கியின் நட­வ­டிக்கை, அரசு பத்­தி­ரங்­களை சிறு முத­லீட்­டா­ளர்கள் வாங்கி, விற்­பதை எளி­தாக்கும் வகையில் அமைந்­தாலும், நடை­மு­றையில் இதில் பல சிக்­கல்கள் நீடிக்­கவே செய்­கின்­றன. இந்த பரி­வர்த்­த­னையை, வங்­கிகள் மற்றும் முதன்மை டீலர்கள் மூலமே மேற்­கொள்ள முடியும். இப்­போ­தைக்கு ஐ.டி.பி.ஐ., வங்கி மட்டும் தான் சிறு முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு இந்த வச­தியை அளிக்­கி­றது. மேலும், பல பொதுத்­துறை வங்­கிகள் இதை வழங்­கத்­து­வங்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. எனினும், சிறு முத­லீட்­டா­ளர்கள் விரும்­பிய அளவில் பரி­வர்த்­தனை செய்ய வழி செய்­யப்­பட்­டி­ருப்­பது சாத­க­மான அம்­ச­மாகும்.
அரசு பத்­தி­ரங்­களை நேர­டி­யாக வாங்கி விற்­ப­தற்­கான வாய்ப்பு சிறந்­த­தாக கரு­தப்­பட்­டாலும், இதன் தன்­மையை முத­லீட்­டா­ளர்கள் சரி­யாக புரிந்து கொள்ள வேண்டும் என நிதி ஆலோ­ச­கர்கள் கரு­து­கின்­றனர். முதலில் அரசு பத்­தி­ரங்­களின் செயல்­பாடு சிக்­க­லா­னது என்­கின்­றனர். னினும், சிறு முத­லீட்­டா­ளர்கள் அரசு பத்­தி­ரங்­களில் நேர­டி­யாக பங்­கேற்­ப­தற்­கான வாய்ப்பு, நல்ல முன்­னேற்றம் என்ற கருத்தும் முன்­வைக்­கப்­ப­டு­கி­றது. சிறு முத­லீட்­டா­ளர்­களின் நீண்ட கால முத­லீட்டு வாய்ப்பை இது மேலும் பர­வ­லாக்கும் தன்மை கொண்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)