பதிவு செய்த நாள்
16 ஆக2016
05:06

ஐ.எல்., அண்டு எப்.எஸ்., விற்பனை ரூ.407 கோடிஐ.எல்., அண்டு எப்.எஸ்., இன்ஜினியரிங் அண்டு கன்ஸ்டிரக் ஷனின் விற்பனை, 2016 ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 406.92 கோடி ரூபாயாக உள்ளது. இது, முந்தைய ஆண்டின், இதே காலாண்டில், 480.05 கோடி ரூபாயாக அதிகரித்து இருந்தது. இதே காலத்தில், அந்த நிறுவனத்தின் நிகர இழப்பு, 60.95 கோடி ரூபாயில் இருந்து, 67.36 கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது.
எம்பீ டிஸ்டிலரீஸ் இழப்பு ரூ.5.36 கோடிஎம்பீ டிஸ்டிலரீஸ், கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 5.36 கோடி ரூபாயை தனிப்பட்ட நிகர இழப்பாக கொண்டு உள்ளது. அதேசமயம், முந்தைய ஆண்டின், இதே காலாண்டில், அந்த நிறுவனம், 3.37 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியது. இதே காலத்தில், அந்த நிறுவனத்தின் விற்பனை, 47.09 சதவீதம் குறைந்து, 172.36 கோடி ரூபாயில் இருந்து, 91.20 கோடி ரூபாயாக குறைந்து உள்ளது.
ஜிண்டால் ஸ்டெயின்லெஸ் விற்பனை ரூ.2,117 கோடிஜிண்டால் ஸ்டெயின்லெஸ் நிறுவன விற்பனை, கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 2,117.41 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. இது, முந்தைய ஆண்டின், இதே காலாண்டில், 1,651.62 கோடி ரூபாயாக குறைந்து இருந்தது. இதே காலத்தில், அந்த நிறுவனத்தின் நிகர இழப்பு, 137.79 கோடி ரூபாயில் இருந்து, 64.64 கோடி ரூபாயாக குறைந்து உள்ளது.
சன் பார்மாசூடிக்கல்ஸ் லாபம் ரூ.2,034 கோடிசன் பார்மாசூடிக்கல்ஸ் இண்டஸ்ட்ரீஸ், கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 2,033.71 கோடி ரூபாயை மொத்த நிகர லாபமாக ஈட்டி உள்ளது. இது, முந்தைய ஆண்டின், இதே காலாண்டில், 555.90 கோடி ரூபாயாக குறைந்து இருந்தது. இதே காலத்தில், அந்த நிறுவனத்தின் விற்பனை, 22.76 சதவீதம் உயர்ந்து, 6,526.85 கோடி ரூபாயில் இருந்து, 8,006.68 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.
பஜாஜ் எலக்ட்ரிகல்ஸ் விற்பனை ரூ.948 கோடிபஜாஜ் எலக்ட்ரிகல்சின் விற்பனை, கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 948.29 கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது. இது, முந்தைய ஆண்டின், இதே காலாண்டில், 992.91 கோடி ரூபாயாக அதிகரித்து இருந்தது. இதே காலத்தில், அந்த நிறுவனத்தின் தனிப்பட்ட நிகர லாபம், 11.94 சதவீதம் அதிகரித்து, 20.43 கோடி ரூபாயில் இருந்து, 22.87 கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது.
பாங்க் ஆப் இந்தியா வருவாய் ரூ.9,425 கோடிபாங்க் ஆப் இந்தியாவின் மொத்த செயல்பாட்டு வருவாய், கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 9,425.93 கோடி ரூபாயாக குறைந்து உள்ளது. இது, முந்தைய ஆண்டின், இதே காலாண்டில், 10 ஆயிரத்து, 818.59 கோடி ரூபாயாக இருந்தது. சென்ற ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், அந்த வங்கி, 741.36 கோடி ரூபாயை நிகர இழப்பாக கொண்டு உள்ளது.
காபி டே என்டர்பிரைசஸ் விற்பனை ரூ.5 கோடிகாபி டே என்டர்பிரைசசின் விற்பனை, கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 5.86 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. இது, முந்தைய ஆண்டின், இதே காலத்தில், 2.75 கோடி ரூபாயாக குறைந்து இருந்தது. இதே காலத்தில், அந்த நிறுவனத்தின் நிகர இழப்பு, 92.12 கோடி ரூபாயில் இருந்து, 27.27 கோடி ரூபாயாக குறைந்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|