பதிவு செய்த நாள்
16 ஆக2016
05:07
புதுடில்லி : அமேசான் இந்தியா நிறுவனம், பழைய புத்தகங்களை வழங்கும் சேவையை, இந்தியாவில் துவக்கியிருக்கிறது.
அமெரிக்காவில் மிகவும் வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கும், இந்த வர்த்தகத்தை, இப்போது இந்தியாவிலும் அறிமுகம் செய்துள்ளது, அமேசான் நிறுவனம். ஒரு லட்சம் தலைப்புகளில் புத்தகங்களை விற்பனைக்கு விடுத்துள்ளது, இந்நிறுவனம்.இந்த பழைய புத்தகங்கள் வாடிக்கையாளர்கள் திருப்தி அடையும் விதத்தில், புதிய புத்தகங்களை போலவே இருக்கும்; அதற்காக, புத்தகத்தின் நிலை எவ்வாறு இருக்கிறது என்பதை, விற்பனையாளர்கள் பார்த்து, அதன் பின்னரே வலைதளத்தில் பட்டியலிடப்படும் என்கிறது, அமேசான்.
399 ரூபாய்க்கு மேல் வாடிக்கையாளர்கள் வாங்கும் புத்தகங்களை பட்சத்தில், விற்பனையாளர்கள் மூலமாக, இலவசமாக புத்தகங்கள் வினியோகம் செய்யப்படும். அதுமட்டுமின்றி, புத்தகத்தை வாங்கிய பின், பணம் செலுத்தும் வசதியையும் வழங்குகிறது அமேசான் நிறுவனம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|