ரகுராம் ராஜன் வழியை பின்­பற்ற வேண்டும்: ‘மூடிஸ்’ ரகுராம் ராஜன் வழியை பின்­பற்ற வேண்டும்: ‘மூடிஸ்’ ... ரூபாயின் மதிப்பு உயர்வு – ரூ.66.82 ரூபாயின் மதிப்பு உயர்வு – ரூ.66.82 ...
பல­த­ரப்­பட்ட பொருட்கள் ஏற்­று­ம­தியில் இந்­தி­யாவின் பங்­க­ளிப்பு அதி­க­ரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஆக
2016
05:09

புது­டில்லி : ‘உல­க­ளவில், பல­த­ரப்­பட்ட பொருட்­களை ஏற்­று­மதி செய்­வதில், இந்­தி­யாவின் பங்­க­ளிப்பு அதி­க­ரித்து வரு­கி­றது’ என, பி.எச்.டி., வர்த்­தக கூட்­ட­மைப்பின் ஆய்­வ­றிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
அதன் விபரம்: இந்­தியா, பல­த­ரப்­பட்ட பொருட்­களை ஏற்­று­மதி செய்­வதில் கவனம் செலுத்தி வரு­கி­றது. இது, ஒட்­டு­மொத்த ஏற்­று­மதி வளர்ச்­சிக்கு உதவும். உலக நாடு­களின் ஏற்­று­ம­தியில், முதல் 10 இடங்­களில் உள்ள பொருட்­களில், இந்­தி­யாவின் பங்கு, 58 சத­வீ­த­மாக உள்­ளது. இந்த பட்­டி­யலில், ஹாங்காங், 89 சத­வீ­தத்­துடன் முத­லி­டத்தில் உள்­ளது. அடுத்த இடங்­களில், கொரிய குடி­ய­ரசு, 86 சத­வீதம்; ஜப்பான், 77; பிரிட்டன், 71; ஜெர்­மனி, 70; அமெ­ரிக்கா, 68; சீனா, 68; நெதர்­லாந்து, 63; பிரான்ஸ், 60 சத­வீதம் என்ற அளவில், பங்­க­ளிப்பை கொண்டுள்ளன.
சர்­வ­தேச நாடு­களின் பொரு­ளா­தார மந்­த­நி­லையால், இதர நாடு­களைப் போல, இந்­தி­யாவின் ஏற்­று­மதி வளர்ச்­சியும் குறைந்­துள்­ளது.எனினும், சரக்கு போக்­கு­வ­ரத்து உள்­ளிட்ட, ஏற்­று­மதி சார்ந்த அடிப்­படை கட்­ட­மைப்பு துறை­களில் ஏற்­பட்டு வரும் முன்­னேற்றம், ஆறுதல் அளிப்­ப­தாக உள்­ளது. இதர போட்டி நாடு­களை விட, இந்­திய ஏற்­று­மதி நிறு­வ­னங்­களின் கடன் சார்ந்த செல­வி­னங்கள் அதி­க­மாக உள்­ளன. இதுவும், ஏற்­று­மதி வளர்ச்­சிக்­கான தடைக்­கற்­களில் ஒன்­றாக உள்­ளது.
சர்­வ­தேச பொரு­ளா­தார மந்­த­நி­லையால், 2015ல், பிரான்ஸ் தவிர்த்து, இதர முன்­னணி நாடுகள், ஏற்­று­மதி வளர்ச்­சியில், பின்­ன­டைவை சந்­தித்­துள்­ளன. இந்த வகையில், நெதர்­லாந்தின் ஏற்­று­மதி வளர்ச்சி, மைனஸ் 17 சத­வீதம் என்ற அளவில் பின்­ன­டைவை சந்­தித்­துள்­ளது. ஏற்­று­மதி வளர்ச்­சியில் பின்­ன­டைவை சந்­தித்த நாடு­களின் வரி­சையில், இத்­தாலி, 13 சத­வீதம்; ஜெர்­மனி, 11; பிரிட்டன், 9; கொரிய குடி­ய­ரசு, 8; அமெ­ரிக்கா, 7; ஹாங்காங், 5; சீனா, 3 சத­வீதம் ஆகி­யவை இடம் பெற்­றுள்­ளன.
கடந்த, 2015 – 16ம் நிதி­யாண்டில், சர்­வ­தேச ஏற்­று­ம­தியில், இந்­தி­யாவின் பங்கு, 1.6 சத­வீதம்; ஏற்­று­மதி வளர்ச்சி மைனஸ் 15.5 சத­வீதம் என்ற அளவில் இருக்கும் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இந்­தி­யாவில், சுல­ப­மாக தொழில் துவங்க எடுக்­கப்­பட்டு வரும் நட­வ­டிக்­கைகள், ஏற்­று­மதி அடிப்­படை கட்­ட­மைப்பு வச­தி­களில் மேற்­கொண்டு வரும் சீர்­தி­ருத்­தங்கள் போன்­றவை, நம்­பிக்­கையை விதைத்­துள்­ளன. அதற்­கேற்ப, கடந்த ஜூலை மாதம், நாட்டின் ஏற்­று­மதி, 1.27 சத­வீதம் வளர்ச்சி கண்­டுள்­ளது. இது, வரும் மாதங்­களில் மேலும் அதி­க­ரிக்கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இவ்­வாறு அதில் கூறப்­பட்­டு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
தங்கம்1 கி: 4,805.008 கி: 38,440.00வெள்ளி1 கிராம்: 66.201 கிலோ: 66,200.00என்.எஸ்.இ.,16125.1516025.8099.35 (0.62%) இறக்கம் சிவப்புபி.எஸ்.இ.,54052.6153749.26303.35 (0.56%) இறக்கம் ... மேலும்
business news
சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுஉள்நாட்டில் சர்க்கரை விலை உயர்ந்து வருவதை அடுத்து, ஜூன் முதல் ... மேலும்
business news
“எங்களின் மதிப்பீட்டின்படி, வளர்ந்த நாடுகளின் பொருளாதாரம், 2024ல், கொரோனா தொற்றுக்கு முன் இருந்த நிலைக்கு ... மேலும்
business news
புதுடில்லி,-–‘சாம்சங்’ நிறுவனம், இந்தியாவில், ‘பியூச்சர் போன்’ என அழைக்கப்படும், நுழைவு நிலை போன்களுக்கான ... மேலும்
business news
புதுடில்லி : மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக வந்த செய்தியை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)