பதிவு செய்த நாள்
17 ஆக2016
00:52
புதுடில்லி : யு.எம்., மோட்டார் சைக்கிள் நிறுவனம், இந்திய சந்தைக்கு வர உள்ளது. அமெரிக்காவை சேர்ந்த நிறுவனமாக இருந்தபோதிலும், இந்த நிறுவனத்தின் பெயர், இந்தியாவில் பிரபலம் அடையவில்லை. இந்நிலையில், இந்திய இருசக்கர வாகன சந்தையில், 30 சதவீதத்தை ஸ்கூட்டர்கள் கைப்பற்றி இருப்பதாக, கடந்த ஜூன் மாதம் ஆய்வு செய்த தனியார் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.இதையடுத்து, யு.எம்., மோட்டார் சைக்கிள் நிறுவனம், இந்திய சந்தையில், தன் இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்ய முடிவு செய்து உள்ளது. இதுகுறித்து, அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:எங்கள் நிறுவனம், இந்திய சந்தையில் இருசக்கர வாகனங்களை, 2019ம் ஆண்டில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு உள்ளது. முதல் கட்டமாக, ‘பிளாஷ், பவர்மேக்ஸ், மேட்ரிக்ஸ்’ ஆகிய மூன்று மாடல்களில், ஸ்கூட்டர்கள் அறிமுகம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|