பதிவு செய்த நாள்
17 ஆக2016
04:08

புதுடில்லி : ‘ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரியால், பெட்ரோலியப் பொருட்கள் துறைக்கு பயனில்லை’ என, ‘இக்ரா’ தர நிர்ணய நிறுவனம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு, ‘ஒரே நாடு; ஒரே வரி’ என்ற கொள்கைப்படி உருவாக்கப்பட்ட, ஜி.எஸ்.டி., மசோதாவை, பார்லிமென்டின் இரு அவைகளிலும் நிறைவேற்றி உள்ளது. இம்மசோதாவுக்கு, குறைந்தபட்சம், 16 மாநில சட்டசபைகள் ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதன்பின், ஜனாதிபதியின் ஒப்புதலுடன், ஜி.எஸ்.டி., சட்டம் நடைமுறைக்கு வரும். அசாம், பீஹார் மாநிலங்கள், ஜி.எஸ்.டி., மசோதாவை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளன.
மத்திய அரசு, 2017 ஏப்., 1 முதல், ஜி.எஸ்.டி.,யை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, பல பொருட்களின் விலை சரியவும், உயரவும் கூடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அது, ஜி.எஸ்.டி., கவுன்சில் பரிந்துரைக்கும் வரிவிதிப்பை பொறுத்து உள்ளது. தற்போதைய ஜி.எஸ்.டி., மசோதாவில், ஒருசில பெட்ரோலியப் பொருட்கள், புகையிலை, மது ஆகியவை இடம் பெறவில்லை. அதனால், அத்துறைகள், ஜி.எஸ்.டி., பயன்களை பெற முடியாமல், எதிர்மறை தாக்கத்திற்கு ஆளாகும்; இரட்டை வரி திட்டத்தை பின்பற்ற வேண்டிய நிலை ஏற்படும் என்பதால், அத்துறை நிறுவனங்களின் லாப வரம்பு பாதிக்கும் என, இக்ரா எச்சரித்துள்ளது.
பெட்ரோலியப் பொருட்களில், சமையல் எரிவாயு, நாப்தா, மண்ணெண்ணெய் உள்ளிட்டவை, ஜி.எஸ்.டி.,யில் இடம் பெற்றுள்ளன. கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் ஆகிய ஐந்து பொருட்கள், ஜி.எஸ்.டி.,யில் தற்போது இடம் பெறவில்லை. எப்போது சேர்க்கப்படும் என்பதை, ஜி.எஸ்.டி., கவுன்சில் பரிந்துரைக்கும்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|