ஜி.எஸ்.டி.: பெட்­ரோ­லிய பொருட்­க­ளுக்கு பய­னில்லைஜி.எஸ்.டி.: பெட்­ரோ­லிய பொருட்­க­ளுக்கு பய­னில்லை ... ஜி.எஸ்.டி., கலந்­தாய்வு கூட்டம்; மாநில நிதி­ய­மைச்­சர்கள் பங்­கேற்­கின்­றனர் ஜி.எஸ்.டி., கலந்­தாய்வு கூட்டம்; மாநில நிதி­ய­மைச்­சர்கள் ... ...
சாதிக்கும் ‘சாகர்­மாலா’ சரக்கு கப்பல் போக்­கு­வ­ரத்து திட்டம்; உருக்கு துறைக்கு ரூ.6,500 கோடி மிச்சம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஆக
2016
04:09

புது­டில்லி : மத்­திய அரசின், ‘சாகர்­மாலா’ துறை­முக மேம்­பாட்டு திட்­டத்தின் கீழ், சரக்கு கப்பல் போக்­கு­வ­ரத்து மூலம், உருக்கு நிறு­வ­னங்­க­ளுக்கு, ஆண்­டுக்கு, 6,500 கோடி ரூபாய் மிச்­ச­மாகும் என, ஆய்­வொன்றில் தெரி­ய­வந்­துள்­ளது.
மத்­திய அரசு, சாகர்­மாலா என்ற துறை­முக மேம்­பாட்டு திட்­டத்தை, கடந்த ஆண்டு அறி­மு­கப்­ப­டுத்­தி­யது. இத்­திட்­டத்தின் கீழ், 13 மாநி­லங்கள் மற்றும் யூனியன் பிர­தே­சங்­களை உள்­ள­டக்­கிய, 7,500 கி.மீ., நீள­முள்ள இந்­திய கட­லோரப் பகு­தியில், 5 – 6 புதிய துறை­மு­கங்கள் உரு­வாக்­கப்­பட உள்­ளன; அவற்றில் அமைய உள்ள கட­லோர பொரு­ளா­தார மண்­ட­லங்­களில், பல்­வேறு துறை சார்ந்த தொழிற்­சா­லைகள் இடம் பெற உள்­ளன.
உருக்கு நிறுவனங்கள்:இத்­தொ­ழிற்­சா­லைகள், அவற்­றுக்­கான மூலப் பொருட்­களை, கட­லோர சரக்கு கப்பல் போக்­கு ­வ­ரத்து மூலம், இதர மாநி­லங்­களில் இருந்து சுல­ப­மாக பெற்றுக் கொள்ளும். இந்த வகையில், சாகர்­மாலா திட்டம் மூலம், சரக்கு போக்­கு­வ­ரத்தில், ஆண்­டுக்கு, 35 ஆயிரம் கோடி ரூபாய் மிச்­ச­மாகும் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அதில், ஆண்­டுக்கு, 4 கோடி டன் உருக்கு உற்­பத்தி திறன் கொண்ட நிறு­வ­னங்கள், 6,500 கோடி ரூபாய் வரை சேமிக்கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.
பெரும்­பா­லான உருக்கு நிறு­வ­னங்கள், மூலப்­பொ­ரு­ளான இரும்புத் தாது கிடைக்கும் பகு­திக்கு அரு­கேதான் தொழிற்­சா­லை­களை அமைக்­கின்­றன. அதனால், உள்­நாடு மற்றும் வெளி­நாட்­டிற்­கான சரக்கு போக்­கு­வ­ரத்­திற்கு, கணி­ச­மான தொகையை செல­வி­டு­கின்­றன. நக­ருக்கு அருகே, துறை­மு­கங்­களில் அமையும், கட­லோர பொரு­ளா­தார மண்­ட­லங்­களில், உருக்கு தொழிற்­சா­லை­களை நிறு­வினால், சரக்கு போக்­கு­வ­ரத்து செலவு கணி­ச­மாக குறையும். கட­லோர சரக்கு போக்­கு­வ­ரத்­திலும், உள்­நாட்டில், குழாய் மூலம் இரும்புத் தாதுவை கொண்டு வரு­வ­திலும், உருக்கு தொழிற்­சா­லைகள், பெரும் தொகையை மிச்­சப்­ப­டுத்த முடியும்.
மிச்சப்படுத்தலாம் :உருக்கு பொருட்­களை, உள்­நாட்டில் விற்­ப­னைக்கு அனுப்­பு­வ­திலும், சரக்கு போக்­கு­வ­ரத்து செலவை குறைக்­கலாம்; ஏற்­று­ம­தி­யிலும் பணத்தை மிச்­சப்­ப­டுத்­தலாம். தென்­கொ­ரி­யாவின், போஹங் மற்றும் எகிப்தின், போர்ட் செய்ட் துறை­மு­கங்­களில், உருக்கு மற்றும் உர நிறு­வ­னங்கள், இந்த வகையில் செயல்­பட்டு வரு­வது குறிப்­பி­டத்­தக்­கது. இந்­திய கட­லோர பொரு­ளா­தார மண்­ட­லங்­களில் அமையும் உருக்கு நிறு­வ­னங்கள், சரக்கு போக்­கு­வ­ரத்தில், டன்­னுக்கு, சரா­ச­ரி­யாக, 800 – 1,000 ரூபாய் மிச்­சப்­ப­டுத்­தலாம் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)