பதிவு செய்த நாள்
18 ஆக2016
07:08
சென்னை : மை டி.வி.எஸ்., நிறுவனம், புதிய மாற்றங்களை அறிமுகம் செய்ய உள்ளது.டி.வி.எஸ்., ஆட்டோமொபைல் சொல்யூஷன், பல்வேறு மோட்டார் வாகன வாடிக்கையாளர் சேவைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் ஒரு பிரிவான, மை டி.வி.எஸ்., தற்போது, அனைத்து நிறுவனங்களின் கார்கள் பழுது பார்க்கும் சேவையில் ஈடுபட்டு வருகிறது. மை டி.வி.எஸ்., நிறுவனத்துக்கு, ஆறு மாநிலங்களில், 100 ஷோரூம்கள் உள்ளன. வரும், 2017ம் ஆண்டுக்குள், ஷோரூம்களின் எண்ணிக்கையை, 200 ஆக அதிகரிக்க, அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், மை டி.வி.எஸ்., நிறுவனம், அதன் பிராண்ட் இமேஜ் உள்ளிட்ட பலவற்றில் புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்த இருக்கிறது. உதிரி பாகங்களுக்காக, பல நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.மேலும் கார் உரிமையாளரின் அனைத்து விதமான தேவைகளையும் நிறைவு செய்யும் வகையில் சேவைகள் வழங்க, மை டி.வி.எஸ்., முடிவு செய்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|