ஏற்­று­மதி நிறு­வன விதி­மு­றைகள் தளர்வு ஏற்­று­மதி நிறு­வன விதி­மு­றைகள் தளர்வு ... ரூபாய் மதிப்பில் சரிவு : ரூ.66.86 ரூபாய் மதிப்பில் சரிவு : ரூ.66.86 ...
ஐ.நா., ஆய்­வ­றிக்கை: தகவல் தொடர்பு, தொழில்­நுட்ப சேவை ஏற்­று­மதி; உல­க­ளவில் இந்­தி­யா­வுக்கு முத­லிடம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஆக
2016
07:09

ஜெனீவா : ‘ தகவல் தொடர்பு, தொழில்­நுட்ப சேவைகள் ஏற்­று­ம­தியில், உல­க­ளவில் இந்­தியா முத­லி­டத்தை பிடித்­துள்­ளது’ என, ஐ.நா.,வின் சர்­வ­தேச அறி­வுசார் சொத்­து­ரிமை அமைப்பின் ஆய்­வ­றிக்­கையில் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.
இந்த அமைப்பின் டைரக்டர் ஜெனரல் பிரான்சிஸ் குரி, சுவிட்­சர்­லாந்தில், ஜெனீ­வாவில் உள்ள ஐ.நா., அலு­வ­ல­கத்தில், இந்­தாண்டின், ‘சர்­வ­தேச கண்­டு­பி­டிப்பு குறி­யீடு – ஜி.ஐ.ஐ.,’ அறிக்­கையை வெளி­யிட்டார்.
அதன் விபரம்: கடந்த ஒன்­பது ஆண்­டு­க­ளாக, நுாற்­றுக்கும் மேற்­பட்ட நாடு­களின் புது­மை­யான கண்­டு­பி­டிப்பு திறன் குறித்து ஆய்வு செய்து, ஜி.ஐ.ஐ., அறிக்கை வெளி­யி­டப்­பட்டு வரு­கி­றது.
முதலிடம்கண்­டு­பி­டிப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்­பாடு, பல்­க­லைகள் தரம், அறி­வியல் ஆய்­வ­றிக்கை, வர்த்­தக சூழல் உள்­ளிட்ட பல்­வேறு பிரி­வு­களில், ஒரு நாடு செயல்­படும் விதத்தின் அடிப்­ப­டையில், ஜி.ஐ.ஐ., தயா­ரிக்­கப்­ப­டு­கி­றது. இந்த வகையில் தகவல் தொடர்பு, தொழில்­நுட்ப சேவைகள் ஏற்­று­மதி பிரிவில், உலக அளவில் இந்­தியா முத­லி­டத்தை பிடித்­துள்­ளது. கடந்த ஆண்டை போன்றே இந்த ஆண்டும், ஒட்­டு­மொத்த ஜி.ஐ.ஐ., பட்­டி­யலில், சுவிட்­சர்­லாந்து முத­லி­டத்தை பிடித்­துள்­ளது. அடுத்த இடங்­களில், சுவீடன், பிரிட்டன், அமெ­ரிக்கா, பின்­லாந்து ஆகிய நாடுகள் உள்­ளன.
இந்த பட்­டி­யலில், கடந்த ஆண்டு, 85வது இடத்தில் இருந்த இந்­தியா, இந்­தாண்டு, 61வது இடத்­திற்கு முன்­னே­றி­யுள்­ளது. இது, வர­வேற்­கத்­தக்க முன்­னேற்­ற­மாகும். சிக்­க­னத்தில், பாரம்­ப­ரிய பெருமை பெற்ற இந்­தியா, குறைந்த செலவில் புது­மை­யான கண்­டு­பி­டிப்­பு­களை அடை­யாளம் காண்­பதில் வேக­மாக முன்­னேறி வரு­கி­றது. இதே கொள்­கையில் நடை­போட்டால், சர்­வ­தேச சந்­தை­களை இந்­தி­யாவால் கைப்­பற்ற முடியும். அதற்கு, உல­க­ளவில் முத­லி­டத்தை பிடிக்க வேண்டும் என்ற துடிப்­போடு, இந்­திய தொழிற்­சா­லைகள் வேக­மாக செயல்­பட வேண்டும்; அவற்றின் தயா­ரிப்­பு­க­ளுக்கு தேவை பெருக வேண்டும். தொழிற் கொள்­கைகள், மேலும் வெளிப்­ப­டை­யாக இருக்க வேண்டும்.
வலுவான வளர்ச்சி பெருகி வரும் சர்­வ­தேச போட்­டியை சமா­ளிக்கும் வகையில், பணி­யாளர் திறன்­களை மேம்­ப­டுத்­து­வது மிகவும் அவ­சியம். புதிய கண்­டு­பி­டிப்­பு­களில், இந்­தியா வலு­வாக வளர்ச்சி கண்டு வரு­கி­றது. புதுமை படைப்­பிற்­கான சூழலும் மேம்­பாடு அடைந்­துள்­ளது. இத்­த­கைய போக்கு, புது­மை­யான கண்­டு­பி­டிப்­பு­களில் முதல் வரி­சையில் உள்ள நாடு­க­ளுடன், இந்­தியா நெருங்க வழி­வ­குக்கும். இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுஉள்­ளது. சீனா, முதன்முறை­யாக, ‘ஜி.ஐ.ஐ. – டாப் 25’ நாடு­களில் நுழைந்து, 25வது இடத்தை பிடித்­துள்­ளது.
கடந்த ஐந்து ஆண்­டு­களில், புதிய கண்­டு­பி­டிப்­பு­க­ளுக்­காக இன்­போசிஸ் நிறு­வனம், 281 காப்­பு­ரி­மை­களை பெற்­றுள்­ளது. அடுத்து, டி.சி.எஸ்., 244, ரான்­பாக்சி, 196, வோக்ஹார்ட், 160, சன்­பார்மா, 84 ஆகிய நிறு­வ­னங்கள் உள்­ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)