அரபு நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பாம்பன் ' டியூப்' கணவாய் மீன்அரபு நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பாம்பன் ' டியூப்' கணவாய் மீன் ... ஆட்களை குறைக்க சிஸ்கோ திட்டம் ஆட்களை குறைக்க சிஸ்கோ திட்டம் ...
தமிழகத்தில் 2.5 லட்சம் டன் உரம் தேக்கம்: உணவு தானிய உற்பத்தி இலக்கில் சிக்கல்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஆக
2016
14:44

தண்ணீர் பற்றாக்குறையில், சாகுபடி பாதிக்கப்பட்டதால், தமிழகம் முழுவதும், 2.5 லட்சம் டன் உரங்கள் தேக்கம் அடைந்துள்ளன. இதனால், வேளாண் துறையினர் கவலை அடைந்துள்ளனர். தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், ஜூனில் குறுவை போக நெல் சாகுபடி நடக்கும். விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், ராமநாதபுரம், திருநெல்வேலி உள்ளிட்ட பல மாவட்டங்களில், குறுவை நெல் சாகுபடியுடன் பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் சாகுபடியும் நடக்கும். தண்ணீர் பற்றாக்குறையால், டெல்டா மாவட்டங்கள் உட்பட பல மாவட்டங்களில் மேற்படி சாகுபடி பெரிய அளவில் நடக்கவில்லை. இதனால், மாநிலம் முழுவதும் தனியார் மற்றும் கூட்டுறவு அமைப்புகளில், 2.5 லட்சம் டன் உரங்கள் தேங்கி உள்ளன.● யூரியா உரம், 1 லட்சம் டன் வரை தேங்கி உள்ளது. அதிகபட்சமாக தஞ்சாவூர் மாவட்டத்தில், 8,346 டன், திருச்சியில், 7,661 டன், வேலுாரில், 6,134 டன், நாகப்பட்டினத்தில், 6,085 டன் உரம் தேங்கி உள்ளது● டி.ஏ.பி., உரம், 40 ஆயிரம் டன் தேங்கி உள்ளது. அதிகபட்சமாக, தஞ்சாவூரில், 4,161, சேலத்தில், 3,399, திருவாரூரில், 3,004 டன்களும் தேங்கி உள்ளன● காம்ப்ளக்ஸ் எனப்படும் கூட்டு உரம், 58 ஆயிரத்து, 914 டன் அளவிற்கு தேங்கி உள்ளது. அதிகபட்சமாக, சேலத்தில், 4,844, கடலுார் 3,848, தஞ்சாவூரில், 3,218, திருவள்ளூரில், 3,604 டன்களும் தேங்கி உள்ளன ● எம்.ஓ.பி., உரம், 37 ஆயிரத்து, 252 டன், எஸ்.எஸ்.பி., உரம், 10 ஆயிரத்து, 608 டன்களும் தேங்கி உள்ளன. இவ்வாறு, மாநிலம் முழுவதும், 2.5 லட்சம் டன் அளவிற்கு உரம் தேக்கிக் கிடக்கிறது.சாகுபடி நடக்காமல் உரங்கள் அதிகம் தேங்குவதால், அரசின் உணவு தானிய உற்பத்தி இலக்கை எட்டுவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதை எப்படி சமாளிப்பது என தெரியாமல், வேளாண் துறை அதிகாரிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)