பதிவு செய்த நாள்
19 ஆக2016
06:00

சென்னை : ரானே குழுமம், அடுத்த மூன்று ஆண்டுகளில், 500 – 600 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.
சென்னையைச் சேர்ந்த ரானே குழுமம், மோட்டார் வாகன உதிரிபாக தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்த குழுமத்தின், ரானே மெட்ராஸ் நிறுவனம், ‘ஸ்டியரிங் கியர்’ தயாரித்து வருகிறது. இந்நிலையில், ரானே குழுமம், ரானே மெட்ராஸ், ரானே என்.எஸ்.கே., நிறுவனங்களில், 500 – 600 கோடி ரூபாயை, முதலீடு செய்ய உள்ளது. இதன் மூலம், ரானே மெட்ராஸ் நிறுவனத்தின், ஸ்டியரிங் கியர் தயாரிக்கும் ஆலையின் திறனை, இரு மடங்கு அதிகரிக்க உள்ளது. இதுகுறித்து, ரானே நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: எங்கள் நிறுவனம் நடப்பு நிதியாண்டில், 11 – 12 சதவீதம் வளர்ச்சி காணும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு, எங்கள் குழுமத்தின் விற்பனை, 3,610 கோடி ரூபாய் என்றளவில் இருந்தது. முதலீட்டுக்கு பின், மேலும் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|