பதிவு செய்த நாள்
19 ஆக2016
06:01

புதுடில்லி : ஆர்.பி.எல்., பேங்க்கின் பங்கு வெளியீடு, இன்று துவங்குகிறது.
இந்தியாவில், ஆர்.பி.எல்., பேங்க், தனியார் துறை வங்கி சேவையில் ஈடுபட்டு வருகிறது. இந்த வங்கியின் பழைய பெயர் ரத்னாகர் பேங்க். 10 ஆண்டுகளுக்கு பின், முதன்முறையாக, தனியார் வங்கியான ஆர்.பி.எல்., பங்குச்சந்தையில் பங்குகள் வெளியீட்டுக்கு வருகிறது. இந்நிறுவனம் பங்கு வெளியீட்டின் மூலம், 1,200 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டு உள்ளது. கடந்த, 2005ல், தனியார் துறையைச் சேர்ந்த யெஸ் பேங்க் மற்றும், 2010ல், பொதுத் துறையைச் சேர்ந்த பஞ்சாப் அண்டு சிந்த் பேங்க், பொதுமக்களுக்கு பங்குகளை வெளியிட்டு நிதி திரட்டின. இந்நிலையில், ஆர்.பி.எல்., பேங்க்கின் பங்கு வெளியீடு, இன்று துவங்கி, வரும், 23ம் தேதி முடிவடைய உள்ளது. இந்த வங்கியின் ஒரு பங்கு விலை, 224 – 225 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|