பதிவு செய்த நாள்
19 ஆக2016
06:02

மும்பை : ரிலையன்ஸ் பிராண்ட்ஸ், ஸ்காட்ச் அண்டு சோடா ஆடைகளை, இந்தியாவில் விற்பனை செய்ய உள்ளது.
ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த, ரிலையன்ஸ் பிராண்ட்ஸ், நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த, ஸ்காட்ச் அண்டு சோடா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம், அந்த நிறுவனத்தின் ஆடைகளை, ரிலையன்ஸ் பிராண்ட்ஸ், இந்தியாவில் விற்க உள்ளது. இதற்காக, இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில், ஸ்காட்ச் அண்டு சோடா கடைகளை, 2017ம் ஆண்டுக்குள், ரிலையன்ஸ் துவக்க உள்ளது. தற்போது, உலகம் முழுவதும், ஸ்காட்ச் அண்டு சோடா நிறுவனத்திற்கு, 160 கடைகள் உள்ளன.
இதுகுறித்து, ரிலையன்ஸ் பிராண்ட்ஸ் தலைவரும் மற்றும் தலைமை செயல் அதிகாரியுமான தர்ஷன் மேத்தா கூறியதாவது:ஸ்காட்ச் அண்டு சோடா, தரமான ஆடைகளை தயாரித்து வருகிறது. எனவே, அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, அதன் ஆடைகளை இந்தியாவில் விற்பனை செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|