பதிவு செய்த நாள்
19 ஆக2016
06:02

புதுடில்லி : ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு, ஆந்திர மாநிலம், கோதாவரி ஆற்றுப்படுகையில், ‘கே.ஜி – டி6’ எண்ணெய் வளத் தொகுப்பு ஒதுக்கப்பட்டு உள்ளது.
இங்குள்ள மூன்று பகுதிகளுடன், ‘திருபாய் – 1’ பகுதியையும் சேர்த்து, தினமும், 8 கோடி கன மீட்டர் இயற்கை எரிவாயுவை உற்பத்தி செய்ய, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஆனால், ரிலையன்ஸ், 2010 – 15 வரையிலான ஐந்து நிதியாண்டுகளில், இலக்கை விட, குறைவாகவே எரிவாயுவை உற்பத்தி செய்து வந்துள்ளது. எரிவாயு உற்பத்தி அடிப்படையில், நிகர லாபத்தை, ரிலையன்ஸ் உள்ளிட்ட கூட்டு நிறுவனங்கள், மத்திய அரசுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என, ஒப்பந்தம் உள்ளது. அதனால், இலக்கை விட குறைவாக உற்பத்தி செய்த, ரிலையன்ஸ் மற்றும் கூட்டு நிறுவனங்களுக்கு, மத்திய அரசு, ஏற்கனவே நான்கு நிதியாண்டுகளுக்கு அபராதம் விதித்துள்ளது. தற்போது, 2014 – 15ம் நிதியாண்டிற்கு, 38 கோடி டாலர் (2,500 கோடி ரூபாய்) அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மொத்த அபராத தொகை, 276 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|