பதிவு செய்த நாள்
19 ஆக2016
06:04

புதுடில்லி : பார்தி டெலிகாம் நிறுவனத்தின் கீழ், பார்தி ஏர்டெல் செயல்பட்டு வருகிறது. சுனில் மிட்டல் குடும்பம், பார்தி டெலிகாம் நிறுவனத்தில், 51 சதவீத பங்குகளை கொண்டுள்ளது. இத்துடன், ‘சிங்டெல்’ என, சுருக்கமாக அழைக்கப்படும், சிங்கப்பூர் டெலிகம்யூனிகேஷன்ஸ் நிறுவனமும், 39 சதவீத பங்குகளை வைத்துள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்த, டெமாசெக் நிறுவனத்திடமும், பார்தி ஏர்டெல் நிறுவனத்தின், 7.39 சதவீத பங்குகள் உள்ளன. இந்நிலையில், சிங்டெல் நிறுவனம், டெமாசெக் நிறுவனத்திடம் உள்ள, பார்தி ஏர்டெல் நிறுவனத்தின், 7.39 சதவீத பங்குகளை, 65.95 கோடி டாலருக்கு (4,400 கோடி ரூபாய்) வாங்க உள்ளது. இதன் மூலம், பார்தி ஏர்டெல் நிறுவனத்தின், 46.39 சதவீத பங்குகள், சிங்டெல் வசம் வரும். பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் பங்கை, சந்தை விலையை விட குறைவாக, தலா, 235 ரூபாய்க்கு, சிங்டெல், ரொக்கத்திற்கு வாங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|