பதிவு செய்த நாள்
19 ஆக2016
06:05

புதுடில்லி : மத்திய அரசு, ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து, மறுசீராய்வுப் பணிகளை துவங்கியுள்ளது.
உள்நாட்டு தயாரிப்பை ஊக்குவித்து, இந்தியாவை, சர்வதேச தயாரிப்பு மையமாக உருவாக்குவதில், மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதையொட்டி, கடந்த, 2014 செப்டம்பரில், ‘மேக் இன் இந்தியா’ எனப்படும், இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
விபரங்கள் சேகரிப்புஅதே ஆண்டு டிசம்பரில், இத்திட்டத்தின் கீழ், வாகனம், உணவு பதப்படுத்துதல், ரசாயனம் உள்ளிட்ட, 25 முக்கிய துறைகளுக்கான, குறுகிய மற்றும் நீண்டகால செயல் திட்டங்களை, மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், திரட்டப்பட்ட முதலீடுகள், செயல்பாட்டிற்கு வந்த திட்டங்கள், பூர்த்தியான இலக்குகள் குறித்த அனைத்து விபரங்களையும் சேகரிக்கும் பணி, தற்போது நடைபெற்று வருகிறது.
துறைகளின் செயல்பாடுஇதுகுறித்து, தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டு துறை செயலர் ரமேஷ் அபிஷேக் கூறியதாவது:மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம், கடந்த மூன்று மாதங்களாக, அனைத்து துறைகளிலும், இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்களை திரட்டி வருகிறது. அத்துடன், பல்வேறு தொழில் கூட்டமைப்புகளின் கருத்துக்களை கேட்டறியும் பணியும் நடைபெற்று வருகிறது. விரைவில், ஒவ்வொரு துறையின் செயல்பாடுகள் குறித்த அறிக்கை வெளியிடப்படும்.இவ்வாறு, அனைத்து துறைகளிலும் சேகரிக்கப்படும் தகவல்களின் அடிப்படை யில், இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தை, மேலும் செம்மைப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|