மருத்­துவ சாத­னங்கள்  பூங்காஆந்­தி­ராவில் அடிக்கல் நாட்டு விழாமருத்­துவ சாத­னங்கள் பூங்காஆந்­தி­ராவில் அடிக்கல் நாட்டு விழா ... பிரிப்பு, இணைப்பு முயற்­சியில்போர்ட்டிஸ் ஹெல்த்கேர் நிறு­வனம் பிரிப்பு, இணைப்பு முயற்­சியில்போர்ட்டிஸ் ஹெல்த்கேர் நிறு­வனம் ...
இந்­தி­யாவில்பன்­னாட்டு தொழில்­நுட்ப நிறு­வ­னங்கள்ஆய்வு மையம் அமைப்­பதில் தீவிரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஆக
2016
01:05

புது­டில்லி:'பன்­னாட்டு தொழில்­நுட்ப நிறு­வ­னங்கள், இந்­தி­யாவில், புதிய கண்­டு­பி­டிப்­புகள், தீர்­வுகள் ஆகி­ய­வற்­றுக்­கான ஆய்வு மற்றும் மேம்­பாட்டு மையங்­களை அமைப்­பதில் ஆர்வம் காட்டி வரு­கின்­றன' என, ஸின்னோவ் மேலாண்மை ஆலோ­சனை நிறு­வ­னத்தின் ஆய்­வ­றிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுஉள்­ளது. அதன் விபரம்:இந்­தி­யாவில், மென்­பொருள், வாகனம், இயந்­தி­ர­ம­ய­மாக்கல் தொழில் போன்ற உயர் தொழில்­நுட்ப துறை­களில், 900க்கும் அதி­க­மான பன்­னாட்டு நிறு­வ­னங்கள் உள்­ளன.
இவை, மின்­னணு துறைக்­கான, 'செமி கண்­டக்டர்' வடி­வ­மைப்பு, நவீன ஆரோக்­கிய பரா­ம­ரிப்பு சாதனம், குறைந்த அலை­வ­ரி­சையில் இயங்கும் தொலை­த்தொ­டர்பு கரு­விகள், ஓட்­டுனர் இல்­லாத கார்­க­ளுக்­கான தானி­யங்கி சாத­னங்கள் உட்­பட, பல்­வேறு தயா­ரிப்­பு­களில் ஈடு­பட்டு வரு­கின்­றன. இதற்­காக, ஏரா­ள­மான நிறு­வ­னங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்­பாட்டு மையங்­களை அமைத்­துள்­ளன. அவற்றில், இந்­தாண்டு ஏப்ரல் நில­வ­ரப்­படி, பெங்­க­ளூ­ரில் மட்டும், 500 மையங்கள் செயல்­பட்டு வரு­கின்­றன. இதில், பெரும்­பான்­மை­யா­னவை, பன்­னாட்டு நிறு­வ­னங்­க­ளுக்கு சொந்­த­மா­னவை. இந்­தி­யாவில், குறைந்த ஊதி­யத்தில், திற­மை­யான தொழில்­நுட்ப வல்­லு­னர்கள் கிடைக்­கின்­றனர். இதர நாடு­களை விட, ஆராய்ச்சி மேற்­கொள்­வ­தற்­கான செலவும் குறை­வாக உள்­ளது.
இதன் கார­ண­மாக, பன்­னாட்டு நிறு­வ­னங்கள், இந்­தி­யாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்­பாட்டு மையங்­களை அமைப்­பதில் ஆர்வம் காட்­டு­கின்­றன. வெளி­நா­டு­களில் உள்ள பல நிறு­வ­னங்கள், அவற்றின் பணி­யா­ளர்­களை குறைத்து விட்டு, இந்­திய மையங்­களில், பணி­யா­ளர்­களை அதி­க­ரித்து வரு­கின்­றன.பன்­னாட்டு நிறு­வ­னங்கள், சர்­வ­தேச சந்­தை­க­ளுக்கு தேவை­யான பொருட்கள் மற்றும் தீர்­வு­க­ளுக்­கா­கவே, இந்­தி­யாவில் ஆய்வு மையங்­களை அமைக்­கின்­றன.
இந்­நி­லையில், இந்­தி­யா­விலும், பல்­வேறு தொழில்­நுட்ப சாத­னங்­க­ளுக்­கான தேவை, பயன்­பாடு ஆகி­யவை பெருகி வரு­வதால், பன்­னாட்டு நிறு­வ­னங்­களின் கவனம், தற்­போது உள்­நாட்டு சந்­தையின் பக்­கமும் திரும்­பி­யுள்­ளது. அந்­நி­று­வ­னங்­களின், புதிய பொருட்­களை சோதித்து பார்க்கும் தள­மா­கவும், இந்­தியா மாறி­யுள்­ளது. உதா­ர­ண­மாக, வாடகை கார் சேவைக்கு,'கிரெடிட் கார்டு' வாயி­லாக மட்­டுமே பணம் வசூ­லிக்கும், அமெ­ரிக்­காவைச் சேர்ந்த ஊபர் நிறு­வனம், இந்­தி­யாவில், ரொக்கப் பணத்­திற்கு சேவை வழங்க வேண்­டிய நெருக்­க­டியை சந்­தித்­தது. அதற்­கான தீர்­வு­களை அமல்­ப­டுத்தி, வெற்றி கண்ட பின், தற்­போது, வியட்னாம், இந்­தோ­னே­ஷியா ஆகிய நாடு­க­ளிலும், ரொக்கப் பரி­வர்த்­தனை சேவையை, ஊபர் துவக்­கி­யுள்­ளது.
இது­போல, கூகுள், ஆப்பிள், அமேசான் உள்­ளிட்ட நிறு­வ­னங்­களும், இந்­திய சந்­தையை நோக்கி, அவற்றின் ஆய்வு மற்றும் மேம்­பாட்டு திட்­டங்­களை அமைத்து வரு­கின்­றன. இது, ஏரா­ள­மான வேலைவாய்ப்­புக்கும் வழிவகுத்­துள்­ளது. இவ்­வாறு அதில் கூறப்­பட்­டு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)