பதிவு செய்த நாள்
21 ஆக2016
06:25

புதுடில்லி:போர்ட்டிஸ் ஹெல்த்கேர் நிறுவனம், தன் பரிசோதனைவணிகத்தை, மருத்துவமனை செயல்பாட்டிலிருந்து பிரித்துவிட்டதாக அறிவித்துள்ளது.போர்ட்டிஸ் ஹெல்த்கேர் நிறுவனம், அதன் பரிசோதனை வணிகம் மற்றும் துணை நிறுவனமான எஸ்.ஆர்.எல்., நிறுவனம் ஆகியவற்றை பிரித்து, அவற்றை போர்ட்டிஸ் மலர் ஹாஸ்பிட்டல் நிறுவனத்துடன் இணைக்கப் போவதாக தெரிவித்துள்ளது. சென்னையில் நடைபெற்று வரும் போர்ட்டிஸ் மலர் மருத்துவமனை, போர்ட்டிஸ் ஹெல்த்கேர் நிறுவனத்துடன் இணைக்கப்படும்.இதையடுத்து, மருத்துவமனை வணிகம் போர்ட்டிஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் கீழ் ஒருங்கிணைக்கப்படும். அதேபோல் பரிசோதனை வணிகம், எஸ்.ஆர்.எல்.,ஆகியவை போர்ட்டிஸ் மலர் நிறுவனத்தின் கீழ் செயல்படும். இந்த பிரிப்பு மற்றும் இணைப்பு முயற்சிகள், அடுத்த ஆண்டு ஜனவரி, 1ம் தேதி மூலம் செயல்பாட்டுக்கு வரும் என தெரிகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|