பதிவு செய்த நாள்
21 ஆக2016
06:26

புதுடில்லி:ஏர் கண்டிஷனர் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும், வோல்ட்டாஸ் நிறுவனம், தன் லாபத்தை, அடுத்த நான்குஆண்டுகளுக்குள்ளாக இரட்டிப்பாக்க திட்டமிட்டுள்ளது.டாடா குழுமத்தை சேர்ந்த வோல்ட்டாஸ் நிறுவனம், கடந்த முதல் காலாண்டில், 157.6 கோடி ரூபாய் லாபம் சம்பாதித்துள்ளது. இது கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடும்போது, 53.7சதவீதம் அதிகமாகும். இதையடுத்து மேலும் பல விரிவாக்கநடவடிக்கைகளில் இந்நிறுவனம் இறங்கி இருக்கிறது.
இதுகுறித்து, இந்நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள்ளாக, எங்கள் நிறுவனத்தின் வருமானத்தை இரட்டிப்பாக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முதல் காலாண்டில்மட்டுமே, 50 ஆயிரம் யூனிட்டுகளை விற்பனை செய்திருக்கிறோம். அடுத்து, புதிய மாடல்களை அறிமுகம் செய்வது, மற்றும் முகவர்களை அதிகரிப்பது போன்றவிரிவாக்க நடவடிக்கைகளில் இறங்க இருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|