பதிவு செய்த நாள்
21 ஆக2016
06:27

புதுடில்லி:நிதி சிக்கலால், ஆஸ்க்மி டாட் காம் நிறுவன சேவை, தற்காலிகமாக நிறுத்தப்படும் நிலைக்கு வந்துள்ளது. இதன் விளைவாக, 4,000 பேர் பணியிழப்புக்கு ஆளாகக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.மின்னணு வர்த்தக சேவை நிறுவனமான, ஆஸ்க்மி டாட் காம் நிறுவனம், நிதி பிரச்னைகள்காரணமாக அதன் சேவைகள் நிறுத்தப்பட்டு உள்ளன. ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்கப்படவில்லை என, தெரிகிறது. ஆஸ்க்மி டாட் காம் நிறுவனம், இன்னும் செயல்பட்டு வந்தாலும், புதிய ஆர்டர்கள் எதையும் அந்நிறுவனம் ஏற்றுக் கொள்ளவில்லை.இந்நிறுவனத்தின், 97 சதவீத பங்குகளை வைத்திருந்த, மலேஷியாவைச் சேர்ந்த, ஆஸ்ட்ரோ நிறுவனம் வெளியேறியதால், இந்த நிதி நெருக்கடி நிலைக்கு ஆஸ்க்மி தள்ளப்பட்டதாக தெரிகிறது. கடந்த மே மாதம், ஆஸ்க்மி டாட் காம் நிறுவனம், மேலும், 30 – 40 நகரங்களில், விரிவாக்க நடவடிக்கைகளில் இறங்கப் போவதாக தெரிவித்திருந்தது. ஆனால், அதற்குள் நிதி சிக்கலில் சிக்கிவிட்டது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|