பதிவு செய்த நாள்
21 ஆக2016
06:32

மும்பை;தனியார் ஆயுள் காப்பீட்டுநிறுவனங்களின், தனிநபர் ஆண்டு பிரீமியம் வளர்ச்சி, கடந்த ஜூலையில், 13 சதவீதமாக உள்ளது என, கோட்டக் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டிஸ்நிறுவனத்தின் ஆய்வறிக்கையில்தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வளர்ச்சி:கடந்த, மே மற்றும் ஜூன் மாதங்களில், தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் தனிநபர் ஆண்டு பிரீமியம் வளர்ச்சி, முறையே, 24 மற்றும் 27 சதவீதமாக இருந்தது. கடந்த ஜூலையில், பஜாஜ் அலையன்ஸ் லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின், தனிநபர் ஆண்டு பிரீமியம் வளர்ச்சி, 44 சதவீதமாக உள்ளது. இது ஜூனில், 72 சதவீதமாக இருந்தது. மதிப்பீட்டு மாதத்தில், எஸ்.பி.ஐ., லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தனிநபர் ஆண்டு பிரீமியம் வளர்ச்சி, 50 சதவீதமாக உள்ளது. இந்த வளர்ச்சி, ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியல் லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு, 15 சதவீதம்; பிர்லா சன்லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு, 10 சதவீதம் என்ற அளவில் இருந்தது.
எல்.ஐ.சி.,பொதுத் துறையைச் சேர்ந்த எல்.ஐ.சி., நிறுவனம், 16 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. சிங்கிள் பிரீமியம் பிரிவில், இந்நிறுவனம், 82 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. இப்பிரிவில், எச்.டி.எப்.சி., லைப் இன்சூரன்ஸ், பஜாஜ் லைப் இன்சூரன்ஸ், எஸ்.பி.ஐ., லைப் இன்சூரன்ஸ், மேக்ஸ் லைப் இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்களும், குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கண்டுள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|