பதிவு செய்த நாள்
21 ஆக2016
23:42

பவர்கிரிட் கார்ப்பரேஷன் லாபம் ரூ.1,801 கோடிபவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா, 2016 ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 1,801.77 கோடி ரூபாயை தனிப்பட்ட நிகர லாபமாக ஈட்டி உள்ளது. இது, முந்தைய ஆண்டின், இதே காலாண்டில், 1,355.64 கோடி ரூபாயாக இருந்தது. இதே காலாண்டுகளில், அந்த நிறுவனத்தின் விற்பனை, 29.42 சதவீதம் உயர்ந்து, 4,689.34 கோடி ரூபாயில் இருந்து, 6,069.06 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.
வொக்கார்ட் நிறுவனம் விற்பனை ரூ.613 கோடிவொக்கார்ட் நிறுவனத்தின் விற்பனை, சென்ற ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 613.35 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. இது, முந்தைய ஆண்டின், இதே காலத்தில், 512.92 கோடி ரூபாயாக இருந்தது. இதே காலத்தில், அந்த நிறுவனத்தின் தனிப்பட்ட நிகர லாபம், 16.33 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.
அக் ஷார் செம் லாபம் ரூ.9 கோடிஅக் ஷார் செம் நிறுவனம், சென்ற ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 9.45 கோடி ரூபாயை தனிப்பட்ட நிகர லாபமாக ஈட்டி உள்ளது. இது, முந்தைய ஆண்டின், இதே காலாண்டில், 3.24 கோடி ரூபாயாக இருந்தது. இதே காலத்தில், அந்த நிறுவனத்தின் விற்பனை, 23.72 சதவீதம் உயர்ந்து, 47.89 கோடி ரூபாயில் இருந்து, 59.25 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.
கிரிம்சன் மெட்டல் விற்பனை ரூ.12 கோடிகிரிம்சன் மெட்டல் இன்ஜினியரிங் கம்பெனியின் விற்பனை, சென்ற ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 12.28 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. இது, முந்தைய ஆண்டின், இதே காலாண்டில், 11.53 கோடி ரூபாயாக இருந்தது. இதே காலத்தில், அந்த நிறுவனத்தின் தனிப்பட்ட நிகர லாபம், 41.67 சதவீதம் உயர்ந்து, 12 லட்சம் ரூபாயில் இருந்து, 17 லட்சம் ரூபாயாக அதிகரித்து உள்ளது.
லக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லாபம் ரூ.10 கோடிலக்ஸ் இண்டஸ்ட்ரீஸ், சென்ற ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 10.17 கோடி ரூபாயை தனிப்பட்ட நிகர லாபமாக ஈட்டி உள்ளது. இது, முந்தைய ஆண்டின், இதே காலாண்டில், 8.62 கோடி ரூபாயாக குறைந்து இருந்தது. இதே காலத்தில், அந்த நிறுவனத்தின் விற்பனை, 9.70 சதவீதம் உயர்ந்து, 163.98 கோடி ரூபாயில் இருந்து, 179.89 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.
கே.எம்.ஜி., மில்க் புட் விற்பனை ரூ.1.88 கோடிகே.எம்.ஜி., மில்க் புட்சின் விற்பனை, சென்ற ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 1.88 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. இது, முந்தைய ஆண்டின், இதே காலாண்டில், 46 லட்சம் ரூபாயாக இருந்தது. இதே காலத்தில், அந்த நிறுவனத்தின் தனிப்பட்ட நிகர லாபம், 17 லட்சம் ரூபாயில் இருந்து, 1.19 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.
அட்லஸ் சைக்கிள்ஸ் லாபம் ரூ.1.24 கோடிஅட்லஸ் சைக்கிள்ஸ் (ஹரியானா) சென்ற ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 1.24 கோடி ரூபாயை தனிப்பட்ட நிகர லாபமாக ஈட்டி உள்ளது. இந்த நிறுவனம், முந்தைய ஆண்டின், இதே காலாண்டில், 2.56 கோடி ரூபாயை நிகர இழப்பாக கொண்டு இருந்தது. இதே காலத்தில், அந்த நிறுவனத்தின் தனிப்பட்ட விற்பனை, 30.87 சதவீதம் உயர்ந்து, 129.04 கோடி ரூபாயில் இருந்து, 168.87 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|