பதிவு செய்த நாள்
21 ஆக2016
23:45

பணம் தொடர்பாக நாம் மேற்கொள்ளும் முடிவுகள், செயல்கள் மற்றும் செய்யத் தவறுபவை எல்லாமே பணம் தொடர்பான நமது நம்பிக்கைகள் அடிப்படையில் தான் அமைகின்றன என்கின்றனர் டெட் கிலாண்ட்ஸ், பிராட் கிலாண்ட்ஸ் மற்றும் ரிக் காலெர்.
இவை தான் நம்மை இயக்கும் பண திரைக்கதைகளாக அமைவதாகவும், இவற்றை புரிந்து கொள்ளும் வழிகளையும் வயர்டு பார் வெல்த் புத்தகத்தில் விளக்கியுள்ளனர்: பணம் தொடர்பான நமது எண்ணங்கள், நம்பிக்கைகள் மற்றும் அணுகுமுறைகள் தான் நமக்கான பண வரைவு திட்டங்களாக இருக்கின்றன. பணத்துடனான நம் தொடர்புகள் ஆழ் மனதில் நன்றாக பதிந்துள்ளன. நம்முடைய பண அனுபவங்களின் அடிப்படையில் தான், நாம் ஒவ்வொருவரும் பணம் தொடர்பாக சிந்திப்பது மாறுபடுகிறது என்று உளவியல் வல்லுனர்களும், நிதி ஆலோசகர்களும் வலியுறுத்துகின்றனர். பணம் தொடர்பான நேரடியாக மற்றும் மறைமுகமாக தொடர்புடைய அனைத்து முடிவுகளும் பண மனநிலையின் அடிப்படையில் தான் அமைகின்றன.
சிறுவயதில் நம்முடைய சுற்றுப்புறத்தில் இருந்து கிடைக்கும் தகவல்கள், செய்திகளை நமக்குள் உள்வாங்கி கொண்டு உலகம் பற்றிய புரிதலை உருவாக்கிக் கொள்கிறோம். பெற்றோர்களிடம் இருந்தும், நெருக்கமானவர்களிடம் இருந்தும் தகவல்களை பெறுகிறோம். பெற்றோர் அல்லது நம் மீது ஆதிக்கம் செலுத்துபவர்கள் கூறும் விஷயங்களில் இருந்து பண திரைக்கதையை பெறுகிறோம். பணம் மரத்தில் காய்ப்பதில்லை, கல்வி, செல்வத்தை யாராலும் பறிக்க முடியாது போன்ற பல அறிவுரைகளை கேட்டு வளர்கிறோம். பணம் பற்றி கவலை கொண்ட பெற்றோரின் பிள்ளைகள், நிதி அச்சத்துடன் வளரலாம். செல்வ செழிப்பான சூழலில் வளர்பவர்கள் பணம் தான் எல்லாமும் என நினைக்க முற்படலாம். நாம் கொண்டிருக்கும் பண திரைக்கதை, பெற்றோரின் வழிமுறைகளின் நகலாக இருக்கலாம்; அதற்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கலாம். பண திரைக்கதையை முழுவதும் சரியானது என்றோ, தவறானது என்றோ கூற முடியாது. இவை சில நேரங்களில் மிகைப்படுத்தலாக, தட்டையானவையாக இருக்கலாம்.
நம்மில் பலர் ஒன்றுக்கும் மேற்பட்ட பண திரைக்கதைகளை கொண்டிருக்கிறோம். இவை ஒன்றுக்கு ஒன்று முரணாகவும் இருக்கலாம். உதாரணமாக ஒருவர், பணக்காரர்கள், சுயநலம் மிக்கவர்கள் எனும் வலுவான எண்ணத்தை கொண்டிருக்கலாம். ஆனால், பணம் தான் வெற்றியின் அறிகுறி என்ற எண்ணமும் கொண்டிருக்கலாம். இவை பெரும்பாலும் ஆழ் மனது சார்ந்தவையாக இருப்பதால் நாம் இவற்றை கேள்வி கேட்பதில்லை. இவற்றை கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுகிறோம். பணம் தொடர்பான நம் நம்பிக்கைகளை மாற்றி அமைப்பதன் மூலம் அவை நம் நிதி வாழ்க்கையில் செலுத்தும் பாதிப்புகளையும் சரி செய்து விடலாம். இதற்கு உங்களை இயக்கி கொண்டிருக்கும் பண நம்பிக்கைகள் என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|