பதிவு செய்த நாள்
23 ஆக2016
04:52

புதுடில்லி : ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, வாகன ஓட்டிகளுக்கு, சுங்க கட்டணத்திற்கான மின்னணு முகவரி சீட்டுகளை வழங்கும் சேவையில் இறங்கி உள்ளது.
மின்னணு சுங்க வசூல் வசதி மூலமாக, சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் கட்டணம் செலுத்த காத்திருக்க வேண்டிய தேவை இருக்காது. அடையாள சீட்டு ஒட்டப்பட்ட வாகனம், சுங்கச்சாவடியை கடக்கும் போது, சுங்கச்சாவடி இயந்திரத்தால் அது படிக்கப்பட்டு, எலக்ட்ரானிக் முறையில் தானாகவே, வாகன ஓட்டியின் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டு, சுங்கக் கட்டணத்திற்கு செலுத்தப்பட்டுவிடும்.
இதுகுறித்து, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் மேலாண் இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான சாந்தா கோச்சார் கூறியதாவது: தற்போது, 343 ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கிகள் முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளில், 90 சதவீத அளவிற்கு சுங்க இணைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளன. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள், 4 லட்சம் மின்னணு சுங்க வசூல் முகவரி சீட்டுகளை வழங்க திட்டமிட்டு உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|