பதிவு செய்த நாள்
23 ஆக2016
04:53

புதுடில்லி : ‘அடுத்த இரு ஆண்டுகளுக்கு, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 7.5 சதவீதமாக இருக்கும்’ என, தர நிர்ணய நிறுவனமான, ‘மூடிஸ்’ அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
அதன் விபரம்: இந்தியாவில், மத்திய அரசு எடுத்து வரும் சீர்திருத்த நடவடிக்கைகளால், தொழில் வளர்ச்சிக்கான சூழல் மேம்பட்டு உள்ளது. அத்துடன், நாட்டின் பணவீக்கமும் மிதமாக உள்ளதால், ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சி மிகச்சிறப்பாக இருக்கும் எனலாம். எனினும், இவ்வளர்ச்சிக்கு வங்கி துறையில் காணப்படும், வாராக்கடன் பிரச்னையும், அதன் விளைவாக வங்கிகளின் சொத்து மதிப்பில் ஏற்பட்டுள்ள சரிவும் இடையூறாக உள்ளன. இப்பிரச்னைகளுக்கு தீர்வு காணாத பட்சத்தில், இந்தியாவின் கடன் தகுதி மதிப்பீடு குறையும் அபாயம் உள்ளது.
அரசு கொள்கை திட்டங்கள் வெற்றி கண்டு வருவது, கண்கூடாக தெரிகிறது. பொருளாதார வளர்ச்சி சார்ந்த சீர்திருத்தங்கள், இந்தியாவின் கடன் தகுதி மதிப்பை உயர்த்த துணை புரிகின்றன. அதனால், அடுத்த இரு ஆண்டுகளில், இந்திய பொருளாதாரம், 7.5 சதவீதம் வளர்ச்சி காணும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. எனினும், தற்போது அரசியலில் ஒத்துழையாமை போக்கு நிலவுவது, வளர்ச்சிக்கான சீர்திருத்த செயல்பாடுகளில், மந்த நிலையை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, நிலம் மற்றும் தொழிலாளர் சார்ந்த சீர்திருத்த திட்டங்களில், முன்னேற்றம் மிதமான அளவிலேயே உள்ளது.
அடுத்த, 12 – 18 மாதங்களில், நாட்டின் நிதி, நடப்பு கணக்கு பற்றாக்குறை ஆகியவை குறைந்து, சேமிப்பும், முதலீடுகளும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. பணவீக்கமும், ரிசர்வ் வங்கி நிர்ணயித்த இலக்கிற்குள் இருக்கும் என, தெரிகிறது. இத்தகைய அம்சங்கள், இந்தியாவின் கடன் தகுதியை மறுமதிப்பீடு செய்ய உதவும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|