பதிவு செய்த நாள்
23 ஆக2016
23:59

புதுடில்லி : பிளிப்கார்ட் நிறுவனம், பொருட்களை விரைவாக டெலிவரி செய்ய, ‘பிளிப்கார்ட் அஷ்யூர்டு’ என்ற திட்டத்தை துவக்கி உள்ளது.
அமேசான் நிறுவனம், பொருட்களை விரைவாக டெலிவரி செய்வதற்காக, ‘அமேசான் பிரைம்’ என்ற திட்டத்தை அண்மையில் துவக்கியது. தற்போது, பிளிப்கார்ட் நிறுவனமும், ‘பிளிப்கார்ட் அஷ்யூர்டு’ என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் அந்த பிரிவில் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஆறு கட்ட தர பரிசோதனைகளுக்கு பின், பொருட்கள் விரைவாக வினியோகிக்கப்படும்.
இதுகுறித்து, பிளிப்கார்ட் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பிளிப்கார்ட் அஷ்யூர்டு’ திட்டத்தின் கீழ், இணையதளத்தில் பொருட்களின் விபரங்களின் கீழே பிளிப்கார்ட் அஷ்யூர்டு எனும் நீல நிற பேட்ஜ் தோன்றும். அத்தகைய பேட்ஜுகளை கொண்டிருக்கும் பொருட்கள், விரைவாக டெலிவரி செய்யப்படும்’ என்றார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|