பதிவு செய்த நாள்
27 ஆக2016
04:53

புதுடில்லி : நெஸ்லே நிறுவனம், இரட்டிப்பு வளர்ச்சியை அடைய திட்டமிட்டு உள்ளது.
நெஸ்லே நிறுவனம், மேகி நுாடுல்ஸ், நெஸ்கபே காபி உள்ளிட்ட பொருட்களை தயாரித்து வருகிறது. மேகி நுாடுல்சில், தடை செய்யப்பட்ட வேதி பொருட்கள் கலந்திருப்பதாக கூறி, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம், அதன் விற்பனைக்கு, கடந்த ஆண்டு தடை விதித்தது. பின், அந்த தடைகளை கடந்து, நெஸ்லே, மேகி நுாடுல்ஸ் விற்பனையை மீண்டும் துவக்கி உள்ளது. தற்போது புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்ய உள்ளது.
இதுகுறித்து, அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: எங்கள் நிறுவனத்தின் பொருட்கள், 900 நகரங்களில் உள்ள, 24 லட்சம் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. சேவையை மேம்படுத்துவது, புதிய பொருட்களை அறிமுகம் செய்வது ஆகியவற்றின் மூலம், வரும் ஆண்டுகளில், இரட்டிப்பு வளர்ச்சி அடைய முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|