பதிவு செய்த நாள்
27 ஆக2016
04:54

புதுடில்லி : மெர்சிடஸ் பென்ஸ், இந்தியாவில், தன் அனைத்து மாடல்களிலும், பெட்ரோல் கார்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
ஜெர்மனியைச் சேர்ந்த, மெர்சிடஸ் பென்ஸ், இந்தியாவில், அதிகளவில் டீசலில் இயங்கக் கூடிய கார்களை விற்பனை செய்து வருகிறது. அண்மையில், ஜி.எல்.இ., 400 எனும், பெட்ரோலில் இயங்கும் காரை அறிமுகம் செய்தது. அதன் விலை, 74.90 லட்சம் ரூபாய். இந்நிலையில், வரும் செப்டம்பர் முதல், அனைத்து மாடல்களிலும் பெட்ரோல் கார்களை அறிமுகப்படுத்த உள்ளது.
இதுகுறித்து, அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: எங்கள் நிறுவனத்தின் டீசல் மற்றும் பெட்ரோல் கார் விற்பனை முறையே, 80 சதவீதம் மற்றும், 20 சதவீதம் என்றளவில் உள்ளது. தற்போது, பெட்ரோல் மாடல் கார்களை அதிகளவில் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளோம். இதன் மூலம், எங்கள் கார் விற்பனை, 30 சதவீதம் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|