பதிவு செய்த நாள்
27 ஆக2016
04:55

புதுடில்லி : வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கை: வெளிநாட்டு வர்த்தக கொள்கை தொடர்பாக, தொழில் மற்றும் வர்த்தக துறையினரின் குறைகளை விரைந்து தீர்க்கும் நோக்கில், இரண்டு குறை தீர்ப்பு குழுக்களை, வர்த்தக அமைச்சகம் அமைத்து உள்ளது. இதில், தலைமை அலுவலகத்தில், வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குனர் தலைமையிலான ஏழு உறுப்பினர்களைக் கொண்ட குழு, காலாண்டிற்கு ஒருமுறை கூடும். மண்டல அளவில் அமைக்கப்படும் பிராந்திய ஆணையத்தின், ஐந்து உறுப்பினர்கள் கொண்ட குழு, மாதம் ஒரு முறை கூடி, பிரச்னைகளுக்கு தீர்வு காணும். ஏற்கனவே உள்ள புகார்கள் மற்றும் புதிய புகார்கள் மீது, இரு குழுக்களும் விரைவாக நடவடிக்கை எடுக்கும். வர்த்தகர்கள், ஏற்றுமதி கொள்கை தொடர்பான தங்கள் கருத்துக்களையும், இக்குழுக்களிடம் தெரிவிக்கலாம். அதன் அடிப்படையில், ஏற்றுமதி கொள்கைகளில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|