பதிவு செய்த நாள்
27 ஆக2016
04:58

புதுடில்லி : ‘ஏற்றுமதியும், உள்நாட்டில் பொருட்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளதால், நடப்பு ஜூலை – செப்., வரையிலான காலத்தில், தயாரிப்பு துறை எழுச்சி காணும்’ என, இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பான, ‘பிக்கி’ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விபரம்: நாட்டின் ஏற்றுமதி, முந்தைய காலாண்டுகளை விட, நடப்பு, 2016 –17ம் நிதியாண்டின், ஜூலை – செப்., வரையிலான இரண்டாவது காலாண்டில், தற்போதைய நிலவரப்படி அதிகரித்துள்ளது. அதுபோல, உள்நாட்டில் பொருட்களுக்கான தேவையும் உயர்ந்துள்ளது; இது, பல்வேறு நிறுவனங்களிடம் நடத்திய ஆய்வில் இருந்து தெரிய வந்துள்ளது. நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் – ஜூன் வரையிலான முதல் காலாண்டில் நடத்திய ஆய்வில், 53 சதவீத நிறுவனங்கள், தயாரிப்பு துறையில் எழுச்சி காணப்படுவதாக தெரிவித்தன. இது, நடப்பு இரண்டாவது காலாண்டிற்கான ஆய்வில், 55 சதவீதமாக உயர்ந்துள்ளது.இதே காலத்தில், ‘ஆர்டர்’கள் அதிகம் பெற்ற நிறுவனங்களின் பங்கு, 38 சதவீதத்தில் இருந்து, 49 சதவீதமாக அதிகரித்துள்ளது.
விரிவாக்க திட்டங்கள்ஏற்றுமதி அதிகம் இருக்கும் என தெரிவித்த நிறுவனங்களின் பங்கு, 36 சதவீதத்தில் இருந்து, 41 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேசமயம், விரிவாக்க திட்டங்கள் குறித்து, அடுத்த ஆறு மாதங்களுக்கு, எந்த முடிவும் எடுக்க வாய்ப்பில்லை என, தெரிவித்த நிறுவனங்களின் பங்கு, 75 சதவீதத்தில் இருந்து, 73 சதவீதமாக குறைந்துள்ளது.
பாதிப்புஇது, தயாரிப்பு துறையின் எழுச்சி மற்றும் மிதமான விரிவாக்க நடவடிக்கைகளுக்கு சான்றாக உள்ளது. ஸ்திரமில்லாத பொருளாதார சூழல், சாதகமற்ற சந்தை நிலவரம், மலிவு விலை பொருட்களின் இறக்குமதியால் எழுந்துள்ள போட்டி, திட்ட அனுமதி பெறுவதில் ஏற்படும் தாமதம், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு பற்றாக்குறை, அதிகரித்து வரும் செலவினங்கள் போன்றவற்றால், விரிவாக்கத் திட்டங்கள் பாதிக்கப்படுவதாக, நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி கடந்த ஜூலையில், பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கான பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலக உள்ள நிலையிலும், பிரிட்டனுக்கான பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி, 12 சதவீதம் உயர்ந்து, 21.50 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டு, இதே மாதத்தில், 19.20 கோடி டாலராக இருந்தது. இதே காலத்தில், ஜெர்மனி நாட்டிற்கான ஏற்றுமதி, 19 சதவீதம் அதிகரித்து, 16.80 கோடி டாலரில் இருந்து, 20 கோடி டாலராக உயர்ந்துள்ளது. பிரான்சுக்கான ஏற்றுமதி, 2.29 சதவீதம் அதிகரித்துள்ளது– இந்திய பொறியியல் ஏற்றுமதி வளர்ச்சி குழு
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|