பதிவு செய்த நாள்
01 செப்2016
15:49

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ 4ஜி சேவை இன்று அறிமுகம் செய்யப்பட்டது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி இதை அறிமுகம் செய்தார். ரூ.50-க்கு 1ஜிபி இன்டர்நெட் டேட்டா, இலவச வாயிஸ் கால் உள்ளிட்ட பல்வேறு அதிரடி சலுகைகள் அதில் அறிவிக்கப்பட்டுள்ளன.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் மும்பையில் நடந்தது. இதில் அந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி பேசினார். அப்போது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜியோ 4ஜி சேவைக்கான அறிவிப்பை வெளியிட்டார்.
அதில் அவர் பேசியதாவது... ‛‛ரிலையன்ஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய முதலீடு இந்த ரிலையன்ஸ் ஜியோ திட்டம் தான். பிரதமர் மோடியின் கனவான 'டிஜிட்டல் இந்தியா'-வை ஜியோ நிறைவற்றும். குறைந்த நேரத்தில் வாடிக்கையாளர்களை எட்டுவதே எங்களின் நோக்கம். தற்போது இந்தியாவின் 18,000 நகரங்கள், 2 லட்சம் கிராமங்களில் முதற்கட்டமாக இதை பயன்படுத்த உள்ளனர். மார்ச், 2017-ம் ஆண்டிற்குள் 90 சதவித மக்களை சென்றடைவதே ரிலையன்ஸ் ஜியோவின் குறிக்கோள். வாடிக்கையாளர்களுக்கு குறைந்த கட்டணத்தில் நிறைந்த சேவையை செய்வதே இலக்கு. எங்களின் இந்த திட்டத்தில் இலவச வாய்ஸ் கால் உள்ளது. ரோமிங் கட்டணம் கிடையாது. குறிப்பாக 1ஜிபி டேட்டாவின் விலை ரூ.50 தான் என்றார்.
ரிலையன்ஸ் ஜியோ 4ஜி-ன் முக்கிய அம்சங்கள்...* 4ஜி சேவையில், 1ஜிபிக்கு ரூ.50 கட்டணம்* இலவச வாய்ஸ் கால்* ரோமிங் கட்டணம் ரத்து* ரூ.19-யிலிருந்து மொபைல் திட்டங்கள்* 4ஜி சேவையடன் கூடிய ஸ்மார்ட் போன் ரூ.2.999 முதல் ரூ.5,999-வரை கிடைக்கும்* உலகின் அநேக மொபைல் போன்களில் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவையை பயன்படுத்த முடியும்* மாணவர்களுக்கு கூடுதலாக 25 சதவித இணைய பயன்பாடு இலவசம்* பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வை-பை வசதி* முதல் 4 மாதங்களுக்கு மட்டும் இலவச இணைய பயன்பாடு
இதுபோன்ற எண்ணற்ற அதிரடி அறிவிப்புகளை ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன், ஐடியா, ஏர்செல் போன்றவை கலக்கத்தில் உள்ளனர்.
இதனிடையே ரிலையன்ஸ் ஜியோ 4ஜி அறிவிப்பால் பங்குச்சந்தைகளில் அந்நிறுவன பங்குகள் அதிரடியாக உயரத் தொடங்கியுள்ளன. மற்ற தொலைத்தொடர்பு நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன. ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவை, செப்.,5ம் தேதி முதல் சந்தை பயன்பாட்டுக்கு வருகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|