பதிவு செய்த நாள்
01 செப்2016
16:21

மும்பை : காலையில் ஏற்றத்துடன் வர்த்தகத்தை துவக்கிய பங்குச்சந்தைகள் பின்னர் நாள் முழுவதும் ஊசலாட்டத்துடன் காணப்பட்டன. வர்த்தக நேர இறுதியில் ரிலையன்ஸ், விப்ரோ உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகள் சரிந்ததை அடுத்து, பங்குச்சந்தைகள் நிறைவடைந்தன. வர்த்தக நேர இறுதியில் சென்செக்ஸ் 28.69 புள்ளிகள் சரிந்து 28,423.48 புள்ளிகளாகவும், நிப்டி 11.55 புள்ளிகள் சரிந்து 8774.65 புள்ளிகளாகவும் உள்ளன.
ரிலையன்ஸ் நிறுவனம் இன்று அறிமுகம் செய்த ஜியோ தொலைத் தொடர்பு சேவையால் தொலைத்தொடர்பு சேவைகளின் பங்குகள் உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரிலையன்ஸ், விப்ரோ, ஆதானி உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிந்தன. அதே சமயம் கெயில், டாடா மோட்டார்ஸ், ஐசிஐசிஐ வங்கி, லுபின் உள்ளிட்ட நிறுவன பங்குகள் ஏற்றத்துடன் காணப்பட்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|