பதிவு செய்த நாள்
01 செப்2016
23:28

மும்பை : நாட்டின் பருத்தி உற்பத்தி, வரும் சீசனில், 3.36 கோடி பொதிகளாக இருக்கும் என, இந்திய பருத்தி கூட்டமைப்பு மதிப்பிட்டு உள்ளது.
இந்தியாவில், அக்., 1ம் தேதி முதல், பருத்தி சீசன் துவங்குகிறது. நடப்பு, 2015 – 16 பருத்தி சீசனில், நாட்டின் பருத்தி உற்பத்தி, 3.37 கோடி பொதிகளாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. ஒரு பொதி, 170 கிலோ என்றளவில் உள்ளது. நாடு முழுவதும் பருத்தி பயிரிடப்படும் பரப்பு, தற்போது உள்ளதை விட வரும் சீசனில், 10 சதவீதம் குறையும் என, தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், வரும் அக்., மாதம் துவங்கும், 2016 – 17 பருத்தி சீசனில், பருத்தி உற்பத்தி, 3.36 கோடி பொதிகளாக இருக்கும் என, இந்திய பருத்தி கூட்டமைப்பு மதிப்பிட்டு உள்ளது. இதே ஆண்டில் பருத்தி அளிப்பு, நான்கு கோடி பொதிகளாகவும்; தேவை, மூன்று கோடியே, எட்டு லட்சம் பொதிகளாகவும் இருக்கும் என, கணக்கிடப்பட்டு உள்ளது. இதன் மூலம், 92 லட்சம் பொதிகள் உபரியாக இருக்கும் என, தெரிகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|