பதிவு செய்த நாள்
01 செப்2016
23:30

புதுடில்லி : சிமென்ட் நிறுவனங்கள் கூட்டாக செயல்பட்டு, சிமென்ட் தயாரிப்பை குறைத்து, விலையை செயற்கையாக உயர்த்தியது தொடர்பான வழக்கில், இந்திய சந்தை போட்டி ஆணையம், 11 சிமென்ட் நிறுவனங்களுக்கு, 6,700 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
தீர்ப்பு விவரம்: கட்டுமான துறைக்கும், அடிப்படை கட்டமைப்பு துறைக்கும் மிகவும் அவசியமானது, சிமென்ட். அதன் விலையை செயற்கையாக உயர்த்த, சிமென்ட் நிறுவனங்கள் இணைந்து செயல்பட்டிருப்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால், நுகர்வோர் மட்டுமின்றி நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, 11 சிமென்ட் நிறுவனங்கள், 6,700 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஏ.சி.சி., இந்தியா சிமென்ட், ராம்கோ, பினானி, ஸ்ரீ சிமென்ட், அல்ட்ரா டெக், ஜே.பி., அசோசியேட்ஸ், ஏ.சி.எல்., சென்சுரி, ஜே.கே.சிமென்ட்ஆகியவற்றுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|