பதிவு செய்த நாள்
01 செப்2016
23:31

புதுடில்லி : ஐ.எச்.எஸ்., மார்கிட் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை விபரம்: கடந்த ஆகஸ்ட் மாதம், இந்திய தயாரிப்பு துறையின் வளர்ச்சி, மிகச்சிறப்பாக இருந்தது. இதற்கு, நுகர்வோர் சாதனங்கள் பிரிவு, குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது. அத்துடன், இடைநிலை பொருட்கள், பொறியியல் சாதனங்கள் ஆகிய பிரிவுகளும் சிறப்பாக செயல்பட்டு உள்ளன. தயாரிப்பு துறை நிறுவனங்கள் பலவற்றுக்கு, புதிய, ‘ஆர்டர்’கள் அதிகம் கிடைத்துள்ளன. அதற்கேற்ப, பொருட்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது.
இத்தகைய செயல்பாடுகள் காரணமாக, ஆகஸ்டில், இந்திய தயாரிப்பு துறைக்கான, ‘என்.ஐ.எம்.பி.எம்.ஐ.,’ குறியீடு, 52.6 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. இது, 2015 ஜூலைக்கு பின் காணப்படும் அதிகபட்ச உயர்வாகும். இந்தாண்டு ஜூலையில், இக்குறியீடு, 51.8 புள்ளிகளாக இருந்தது. இந்தியாவில், தயாரிப்பு துறையில் உள்ள நிறுவனங்களின் செயல்பாடுகள் வலுவாக உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|