பதிவு செய்த நாள்
01 செப்2016
23:32

புதுடில்லி : மாருதி சுசூகி நிறுவனம், கடந்த ஆக., மாதம், 1.19 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது.
உள்நாட்டில் கார்கள் தயாரிப்பு, விற்பனையில், மாருதி சுசூகி இந்தியா முன்னணியில் உள்ளது. இந்த நிறுவனத்தின் கார்கள் விற்பனை, கடந்த ஆக., மாதத்தில், 1.19 லட்சமாக அதிகரித்துள்ளது. இது, 2015 ஆக., மாதத்தில், 1.06 லட்சமாக குறைந்திருந்தது. கடந்த மாதம், மாருதியின் பலேனோ மாடல் கார் விற்பனை, 10 சதவீதம் உயர்ந்து, 45,579 ஆக அதிகரித்துள்ளது.
இது, முந்தைய ஆண்டின் இதே மாதத்தில், 41,461 ஆக இருந்தது. இதே மாதங்களில், சியாஸ் மாடல் கார் விற்பனை, 50 சதவீதம் உயர்ந்து, 4,156ல் இருந்து, 6,214 ஆக உயர்ந்துள்ளது. எஸ்கிராஸ் மாடல் கார் விற்பனை, 7,836ல் இருந்து, 16,806 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், மாருதியின் சிறிய வகை கார்களான ஆல்டோ, வேகன் ஆர் மாடல் விற்பனை, 6 சதவீதம் குறைந்து, 37,665 என்ற எண்ணிக்கையில் இருந்து, 35,490 ஆக சரிவடைந்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|