பதிவு செய்த நாள்
02 செப்2016
12:48

புதுடில்லி : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போராட்டத்தில் 10 மத்திய தொழிற் சங்கங்கள் பங்கேற்றுள்ளன. இந்த வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக நாடு முழுவதிலும் ஏராளமான தொழில் நிறுவனங்கள் முடங்கி உள்ளன.
தமிழகத்தின் திருச்சி பெல் தொழிற்சாலையில் 90 சதவீதம் பணியாளர்கள் வேலைக்கு வராததால், பணிகள் முடங்கி உள்ளன. இதே போன்று விசாகப்பட்டினத்தில் உள்ள விசாக் இரும்பு ஆலை முழுவதுமாக மூடப்பட்டுள்ளது. 15 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் இந்த போராட்டம் வெற்றி அடைந்ததாகவே கருதப்படுகிறது. இந்த போராட்டத்தால் பல கோடி அளவிற்கு வர்த்தம் பாதிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் மற்றும் காப்பீட்டுத்துறை பணிகளும் வேலை நிறுத்த போராட்டத்தால் முடங்கி உள்ளன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|