பதிவு செய்த நாள்
03 செப்2016
03:13
புதுடில்லி : எல் அண்டு டி டெக்னாலஜி நிறுவனத்தின், 900 கோடி ரூபாய் நிதி திரட்டுவதற்கான, பங்கு வெளியீடு, வரும், 12ம் தேதி துவங்குகிறது.
எல் அண்டு டி குழுமத்திற்கு, எல் அண்டு டி டெக்னாலஜிஸ், எல் அண்டி டி இன்போடெக் உள்ளிட்ட பல துணை நிறுவனங்கள் உள்ளன. இதில், எல் அண்டு டி இன்போடெக், கடந்த ஜூலை மாதம், பங்குச்சந்தைகளில், பங்குகளை வெளியிட்டு, 1,200 கோடி ரூபாய் நிதி திரட்டியது. இந்நிலையில், எல் அண்டி டி இன்போடெக் நிறுவனத்தை தொடர்ந்து, எல் அண்டு டி டெக்னாலஜியும், பங்கு வெளியீட்டின் மூலம், 900 கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவு செய்துள்ளது. அதன்படி, அந்த நிறுவனத்தின் பங்கு வெளியீடு, வரும் 12ம் தேதி துவங்கி, 15ம் தேதி முடிகிறது. ஒரு பங்கின் விலை, 850 – 860 ரூபாய் என்றளவில் இருக்கும் என, தெரிகிறது. இந்நிறுவனம், தொலைத்தொடர்பு, நவீன தொழில்நுட்ப பொறியியல் சேவைகளை வழங்குகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|